கம்பராமாயணம் 3084 · ஆரணிய 6.127

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சூழ்ந்த தார் நெடும்படை - தன்னைச் சூழ்ந்துள்ள அணிவகுத்துநிற்கும் பெரிய அரக்கச் சேனைகளை; பகழி - இராமபாணங்கள்; சுற்றுறப் போழ்ந்து - சுற்றிலும் வளைத்துக் கொண்டு பிளந்து; உயிர் குடித்தலின் - (அவ் அரக்கர்களின்) உயிர்களைப் பருகியதால்; புரள - (அவர்கள்) கீழே விழுந்து புரள; முத்தலைத் தலைவன் - (அதைக் கண்டு) திரிசிரா என்னும் படைத்தலைவன்; பொங்கினான் - கோபங் கொண்டவனாக; தாழ்ந்திலன் - தாமதிக்காது; சோரியின் ஆழ்ந்த தேர் - இரத்த வெள்ளத்தில் அழுந்தியிருந்த தனது தேரை; அம்பரத்து ஓட்டி - ஆகாயத்திலே செலுத்தி; ஆர்க்கின்றான் - முழங்குகின்றான்.

இரத்தச் சேற்றில் அழுந்தியிருந்ததால் தரை மீது செல்ல இடமில்லாமல் திரிசிரா என்பவன் வான் வழியே தன் தேரைச் செலுத்தினான், என்பது. அம்பரம் - ஆகாயம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the arrows split the great ranked army all around
  2. and drank their lives so that they rolled on the ground, he blazed with rage;
  3. the three-headed chief did not hold back; his chariot sunk in blood
  4. he drove up into the sky, and he roars.

What the poem says

Irāmaṉ's arrows have encircled the ranked demon army, split it open and drunk the lives of its soldiers. Seeing his men roll on the ground, Tiricirā flares up in anger.

His chariot is stuck deep in the mud of blood and cannot move over the ground, so without delay he drives it up into the sky and roars his challenge from there.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cūḻnta tār neṭum paṭai pakaḻi cuṟṟuṟap
pōḻntu uyir kuṭittaliṉ, puraḷap poṅkiṉāṉ,
tāḻntilaṉ, mut talait talaivaṉ, cōriyiṉ
āḻnta tēr amparattu ōṭṭi ārkkiṉṟāṉ.