கம்பராமாயணம் 3085 · ஆரணிய 6.128
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஊன்றிய தேரினன் - (இராமனெதிரில்) நிலைநிறுத்திய தேரை யுடையவனான அந்தத் திரிசிரா; வாய்மை - (தவறாத) சத்தியத்தில்; யாவர்க்கும் சான்று என - எல்லோர்க்கும் ஓர் எடுத்துக்காட்டாக; நின்ற - விளங்கிய; அத் தரும மன்னவன் - அற நெறிவழுவாத அந்தத் தசரத மன்னவனுக்கு; தோன்றல்தன் - மைந்தனான இராமபிரானின்; திரு உரு மறைய - அழகிய திருமேனி மறையும்படி; உருமின் வெம் கணை - இடிபோன்ற கொடிய அம்புகளை; வான் தொடர் மழை என - வானத்திலிருந்து இடைவிடாது பெய்யும் மழை போல; தூவினான் - மிகுதியாகச் சொரிந்தான்.
தசரதன் சம்பராசுரப் போரில் கைகேயிக்கு இரண்டு வரம் தருவதாக வாக்குறுதியளித்தான்; அது தவறாதவாறு கைகேயியின் கொள்கைக்கு மாறு சொல்லாமல் இராமனைப் பிரிந்தான்; அந்தப் புத்திர சோகத்தால் உயிர் நீத்தான். அதனால் தசரதன் சத்தியம் தவறாமைக்கு யாவரும் போற்றும் எடுத்துக்காட்டாயினான். ஆதலால் 'வாய்மை யாவர்க்கும் சான்றென நின்ற அத் தரும மன்னவன்' என்றார்.
தேரில் நின்ற திரிசிரா மேகத்திற்கும், அவன் செலுத்திய அம்புகள் மழைக்கும் உவமையாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He, his chariot planted firm, showered cruel thunderbolt arrows
- like rain pouring without break from the sky,
- until the sacred form was hidden of the son of that righteous king
- who stood as a witness of truthfulness for all.
What the poem says
Tiricirā holds his chariot steady in the sky facing Irāmaṉ and pours down arrows like thunderbolts, as unbroken as monsoon rain, until Irāmaṉ's body is hidden from view. Tiricirā in his chariot is the cloud, his arrows its rain.
Irāmaṉ is named here as the son of Tacarataṉ, the king who became everyone's example of keeping one's word. He had promised Kaikēyi two boons, honoured them even though it meant sending Irāmaṉ away, and died of grief for his son.