கம்பராமாயணம் 3086 · ஆரணிய 6.129
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தூவிய சரம் எலாம் - (அந்தத் திரிசிரா) சொரிந்த அம்புகளெல்லாம்; துணிய - துண்டுபட்டு அழியுமாறு; இராமனும் - இராமபிரானும்; வெங்கணை ஏவினன் - கொடிய அம்புகளைத் தொடுத்தான்; ஏவி - அவ்வாறு தொடுத்து; பூ இயல் ஏழ் இரு வாளியால் - பொலிவுடைய பதினான்கு பாணங்களால்; பொலம்கொள் தேர் அழித்து - பொன் மயமான அவன் தேரை நாசப்படுத்தி; வெம் பாகனை - கொடிய அவனுடைய தேர்ச் சாரதியையும்; ஆவி அழித்து மாற்றினான் - உயிரழித்து அப் போர் நிலையை மாறுபடச் செய்தான்.
இராமன், தன்னை மறையத் தூவிய அம்புகளைத் துண்டித்துப் பதினான்கு அம்புகளை ஏவித் திரிசிராவின் தேரையழித்துத் தேர்ப் பாகனையும் ஒழித்தான் என்பது.
பூ இயல் வாளி - பொலிவு பொருந்திய அம்பு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that all the arrows showered were cut to pieces, cruel arrows
- Irāmaṉ too let fly; and, having loosed them, with fourteen
- splendid shafts he wrecked the golden chariot
- and destroyed the life of the cruel charioteer, turning the fight.
What the poem says
Irāmaṉ answers the storm by shooting arrows that cut all of Tiricirā's shafts to pieces. Then with fourteen gleaming arrows he smashes the demon's golden chariot and kills his charioteer, and the course of the duel turns.