கம்பராமாயணம் 311 · பால 6.5

Section பால காண்டம் / 6. கையடைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பணிந்து, மணி செற்றுபு குயிற்றி அவிர் பைம் பொன்
அணிந்த தவிசு இட்டு, அதின் அருத்தியொடு இருத்தி
இணைந்த கமலச் சரண் அருச்சனை செய்து 'இன்றே
துணிந்தது என் வினை தொடர்பு' எனத் தொழுது சொல்லும்.

பொருள் · Meaning in Tamil

பணிந்து - (தயரத மன்னன் முனிவனை) வணங்கி; மணி செற்றுபு குயிற்றி அவிர் பைம்பொன் அணிந்த தவிசு இட்டு அருத்தியொடு இனிது இருத்தி - மணிகள் நெருங்கப் பதித்து விளங்கும் பொன்னால் அலங்கரிக்கப்பட்ட ஆசனமிட்டு (அதில்) மிக்க ஆர்வத்துடன் முனிவனை இனிதே இருக்கச் செய்து; இணைந்த கமலச் சரண் அருச்சனை செய்து - தாமரை போன்ற இரு பாதங்களையும் அருச்சித்து; என் வினைத் தொடர்பு - எனது வினைப்பயன்களின் தொடர்பு; இன்றே துணிந்தது என - இன்றே நீங்கியது என்று; தொழுது சொல்லும் - அம்முனிவனை வணங்கிக் கூறலானான்.

செற்றுபு: நெருங்க. குயிற்று: பதித்து. பைம்பொன்: (பண்புத்தொகை), பசுமையான பொன். தவிசு: இருக்கை. அருத்தி: ஆசை. சரணம்: பாதம். அருச்சனை: பூசனை. வினைத்தொடர்பு: வினைப்பயன். இருத்தி: பிறவினை. இருவினைப் பலன்களும் ஆம். நல்வினையும் பிறவிக் காரணம் என்பதால் “இருள் சேர் இருவினை” என்றார் திருவள்ளுவரும். பெரியோர் வருகையால் வினைத் தொடர்புகள் நீங்கும் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Bowing, he set out a seat of bright fresh gold
  2. studded close with gems, and gladly, with eager love, seated him there;
  3. he worshipped the pair of lotus feet, and saying 'This very day
  4. the chain of my karma is cut,' he bowed and spoke.

What the poem says

Tacarataṉ seats Vicuvāmittiraṉ on a jewelled golden seat and performs pūjā to his feet. He declares that the visit of so great a sage has cut the chain of his karma.

The commentary recalls the Tirukkuṟaḷ's phrase 'the two dark deeds': even good deeds bind one to rebirth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṇintu, maṇi ceṟṟupu kuyiṟṟi avir paim poṉ
aṇinta tavicu iṭṭu, iṉitu aruttiyoṭu irutti
iṇainta kamalac caraṇ aruccaṉai ceytu 'iṉṟē
tuṇintatu eṉ viṉait toṭarpu' eṉat toḻutu collum.