கம்பராமாயணம் 3124 · ஆரணிய 6.167
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தான் உருவு கொண்ட தருமம் - தருமமே ஒரு மனித வடிவம் கொண்டாற் போன்ற இராமபிரான்; தெரி சரம் தான் - தேர்ந்தெடுத்து எய்த அம்புதான்; மீன் உருவும் - நட்சத்திரங்களையும் ஊடுருவிச் செல்லும்; மேருவை விரைந்து உருவும் - மேரு மலையையும் விரைவாகப் புகுந்து உருவிச் செல்லும்; மேல் ஆம் வான் உருவும் - மேலேயுள்ளவான மண்டலத்தையும் உருவிச் செல்லும்; மண் உருவும் - பூமியையும் உருவித் துளைத்துச் செல்லும்; (என்றால்); வாள் உருவி வந்தார் - வாளையுருவிக் கொண்டு போரிட வந்த அரக்கர்களின்; ஊன் உருவும் என்னும் இது - உடம்பை ஊடுருவிச் செல்லுமென்பது; உணர்த்தவும் உரித்தோ - எடுத்துக் கூறுவதற்கும் உரியதோ? (ஆகாது.
நட்சத்திரம் முதலியவற்றைத் தடையற முழுதும் துளைத்துச் செல்லவல்ல கூரிய வேகமுள்ள இராமபாணம் அரக்கருடலைத் துளைத்ததென்பது தானே விளங்கும் என்றவாறு. தான் உருவு கொண்ட தருமம் - அறமூர்த்தியான இராமன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The arrows chosen by Dharma that had taken bodily form
- would pierce the stars, would swiftly pierce Mēru, would pierce
- the sky above, would pierce the earth; that they pierced the flesh
- of those who came with drawn swords, does this even need to be said?
What the poem says
Irāmaṉ is dharma itself in human form. His chosen arrows could pass through the stars, through Mount Mēru, through the sky above and the earth below.
So there is no need to say that they pierced the bodies of the demons charging at him with drawn swords. The verse plays on one verb, 'to pierce' or 'to draw', used again and again.