கம்பராமாயணம் 3125 · ஆரணிய 6.168
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அன்று இடை வளைத்தவர் - அப்பொழுது தன்னைச் சூழ்ந்த அரக்கர்கள்; குலங்களொடு அடங்க - தத்தம் கூட்டங்களோடு ஒரு சேர; சென்று உலைவு உறும்படி - அழிந்து போகும்படி; கணை தெரிந்து சிந்த - இராமபிரான் அம்புகளை ஆராய்ந்தெடுத்துச் செலுத்த (அந்த அம்புகள்); வலியோர்கள் - வலிமை மிக்கவர்; எளியோரை - எளியவர்களை; மன்றிடை நலிந்து கொன்றனர் - வெளியிடத்தில் வருத்திக் கொன்று; நுகர்ந்த பொருளின் - (அவர்களிடமிருந்து கவர்ந்து) தாம் அனுபவித்த (அவர்களை விரைவில் அழிக்கும்) செல்வம் போல; கடிது கொன்ற - விரைவாகக் கொன்றன. வலியவர்தம்மினும் எளியவரை வருத்தி அவரிடமிருந்து கவர்ந்த பொருள் அவ் வலியவரை நாசப்படுத்துமென்பது. நலிந்து கொள்வதற்கு ஏற்ற இடமாதல் குறித்து மன்றைக் கூறினார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Choosing and scattering his arrows so that those who had then hemmed him in
- went to ruin together with all their clans,
- he killed them swiftly, like the wealth enjoyed by the strong
- who have tormented and killed the weak in the open square.
What the poem says
Irāmaṉ picks his arrows and scatters them, and the demons who had surrounded him perish together with their whole kin.
They die as quickly as the powerful are destroyed by the wealth they seized from the weak, whom they persecuted and killed in public. Riches taken by oppression, the verse implies, soon ruin those who enjoy them.