கம்பராமாயணம் 3126 · ஆரணிய 6.169

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கடுங் கரன் எனப் பெயர் படைத்த கழல் வீரன் ,
அடங்கலும் அரக்கர் அழிவுற்றிட அழன்றான் ,
ஒடுங்கல் இல் நிணக் குருதி ஓதம் அதின் உள்ளான் ,
நெடுங் கடலின் மந்தரம் எனத் தமியன் நின்றான் .

பொருள் · Meaning in Tamil

கடுங் கரன் எனப் பெயர் படைத்த - கொடிய கரன் என்று பேர்பெற்ற; கழல் வீரன் - வீரக் கழல் பூண்ட வீரன்; அரக்கர் அடங்கலும் அழிவு உற்றிட - அரக்கரெல்லோரும் (போரில்) அழிவடைய; அழன்றான் - சினங் கொண்டான்; ஒடுங்கல் இல் - குறைவில்லாத; நிணக் குருதி ஓதம் அதில் - கொழுப்போடு கூடிய இரத்த வெள்ளத்தினிடையே; உள்ளான் - உள்ளவனான கரன்; நெடுங் கடலில் மந்தரம் என - பெரிய கடலினிடையே மந்தர மலை போல; தமியன் நின்றான் - தனித்தவனாக நின்றான்.

அரக்கர் எல்லோரும் போரில் அழிவெய்திட, நிணக் குருதி வெள்ளத்தில் நிற்கும் கரன் பாற்கடலைக் கடையும்பொழுது, அதனிடையில் நின்ற மந்தர மலை என்னும் மத்துப் போன்றவன் என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The anklet-wearing hero who bore the name of fierce Karaṉ
  2. blazed with anger as all the demons were destroyed;
  3. standing in the tide of fat and blood that never ebbed,
  4. he stood alone, like Mantaram in the vast sea.

What the poem says

With every one of his demons dead, Karaṉ burns with anger. He stands alone in a never-ending flood of blood and fat.

He looks like Mount Mantaram standing in the middle of the ocean: the mountain the gods and demons used as a churning stick when they churned the sea of milk.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṭuṅ karaṉ eṉap peyar paṭaitta kaḻal vīraṉ,
aṭaṅkalum arakkar aḻivuṟṟiṭa aḻaṉṟāṉ,
oṭuṅkal il niṇak kuruti ōtam atil uḷḷāṉ,
neṭuṅ kaṭalil mantaram eṉat tamiyaṉ niṉṟāṉ.