கம்பராமாயணம் 3127 · ஆரணிய 6.170

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

புகையும் நெஞ்சன் - சினத்தீ மூளும் மனமுடைய அந்தக் கரன்; செங்கண் எரி சிந்த - சிவந்த கண்கள் நெருப்புப் பொறியைச் சொரியவும்; வரிவில் பகழி சிந்த - கட்டமைந்த வில் அம்புகளைப் பொழியவும்; பொங்கு குருதிப் புணரியுள் - மேலே பொங்கியெழுகின்ற இரத்தக் கடலிலே; கங்கமொடு காகம் மிடைய - கழுகுகளும் காக்கைகளும் நெருங்க; கடலில் ஓடும் வங்கம் எனல் ஆயது - கடலிலே விரைந்து செல்லும் கப்பலென்று உவமை சொல்லுமாறு; ஒரு தேரின் மிசை வந்தான் - ஒரு தேரின் மேல் வந்தான். கங்கம் - கழுகு. கங்கமொடு காகம் - இவை பிணங்களைத் தின்னும் பொருட்டுப் போர்க் களத்திற்கு வந்தவை. இது கரனுக்குத் தீ நிமித்தமுமாம். குருதி வெள்ளமாக அமைந்ததற்கேற்ப அதனிடையே செல்லும் தேர் வங்கமாக உவமிக்கப் பெற்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. His red eyes scattering fire, his banded bow scattering arrows,
  2. his heart smouldering, in the surging sea of blood,
  3. with vultures and crows crowding round, he came on a chariot
  4. that one could call a ship running on the ocean.

What the poem says

Karaṉ, his heart smoking with rage, eyes throwing sparks and bow pouring arrows, rides out to face Irāmaṉ. His chariot crosses the sea of blood like a ship crossing the ocean.

Vultures and crows crowd around it. They have come to feed on the dead, and their gathering about him is also an ill omen for Karaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ceṅ kaṇ eri cinta, vari vil pakaḻi cinta
poṅku kurutip puṇariyuḷ pukaiyum neñcaṉ,
kaṅkamoṭu kākam miṭaiyak kaṭaliṉ ōṭum
vaṅkam eṉal āyatu oru tēriṉmicai vantāṉ.