கம்பராமாயணம் 3129 · ஆரணிய 6.172
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தீ உருவ - நெருப்புப் போன்ற வடிவையுடையனவும்; கால் விசைய - காற்றைப் போல வேகம் உள்ளனவும்; செவ்வியன - பிற இலக்கணங்கள் எல்லாம் அமைந்தவையுமான; வெவ் வாய் வடிக்கணை ஆயிரம் - கொடிய வாயையும் கூர்மையுமுடைய ஆயிரம் அம்புகளை ஏவி; அரக்கர் பதி எய்தான் - அரக்கர் தலைவனான கரன் இராமன் மேல் தொடுத்தான்; தீ உருவ, கால் விசைய செவ்வியன - அவ்வாறே நெருப்புப் போன்ற வடிவுடையனவும் காற்றுப் போல வேகமுள்ளவையும் சிறப்புடையனவும்; வெவ் வாய் - கொடிய நுனிகளையுடையனவுமான; ஆயிரம் வடிக்கணை - ஆயிரம் கூரிய அம்புகளைத் தூண்டி; இராமனும் அறுத்தான் - இராமபிரானும் துணித்தான்.
கரன் வரும் போதே ஆயிரம் அம்புகளை எய்ய இராமபிரானும் அத்தகைய கணைகளால் அவற்றையறுத்தான் என்பது. கரன் கணை செலுத்தியதையும் இராமன் அவற்றைத் துணித்ததையும் ஒரே தொடர்களால் குறித்தது. போர் உத்தியில் சமநிலை காட்டப் போலும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Fire-shaped, wind-swift, flawless, cruel-mouthed,
- a thousand sharpened arrows the lord of the demons shot;
- with fire-shaped, wind-swift, flawless, cruel-mouthed,
- a thousand sharpened arrows Irāmaṉ cut them down.
What the poem says
Karaṉ opens with a thousand arrows, shaped like fire, swift as wind, perfect in every way and cruelly pointed. Irāmaṉ cuts them all down with a thousand arrows exactly like them.
The poet uses the same words for both volleys, perhaps to show the two fighters evenly matched at this point in the duel.