கம்பராமாயணம் 3130 · ஆரணிய 6.173

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஊழி எரியில் கொடிய பாய் பகழி ஒன்பான்
ஏழ் உலகினுக்கும் ஒரு நாயகனும் எய்தான் ;
சூழ் சுடர் வடிக்கணை அவற்று எதிர் தொடுத்தே
ஆழி வரி வில் கரனும் அன்னவை அறுத்தான் .

பொருள் · Meaning in Tamil

ஏழ் உலகினுக்கும் ஒரு நாயகனும் - ஏழு வகையான உலகங்களுக்கெல்லாம் ஒப்பற்ற நாயகனான இராமபிரானும்; ஊழி எரியின் கொடிய - ஊழிக் காலத்து உலகையழிக்க வல்ல நெருப்பைக் காட்டிலும் கொடுமையுடையனவாய்; பாய் பகழி ஒன்பான் - பாய்ந்து செல்லும் ஒன்பது பாணங்களை; எய்தான் - (கரன்மேல்) தொடுத்தான்; ஆழி வரிவிற் கரனும் - வட்டமாக வளைந்த வில்லையுடைய கரன் என்னும் அரக்கனும்; சுடர் சூழ் வடிக் கணை - ஒளி பரவும் கூரிய (ஒன்பது) அம்புகளை; அவற்று எதிர் தொடுத்து - அந்தக் கணைகளுக்கு எதிராகச் செலுத்தி; அன்னவை அறுத்தான் - அந்த அம்புகளைத் துணித்தான்; ஏ - அசை. ஏழுலகினுக்கு ஒரு நாயகன் - கீழேழு, மேலேழு ஆகிய பதினான்கு உலகங்களுக்கும் தலைவனாகிய இராமபிரான். 'செம்மாண் தனிக்கோல் உலகேழினும் செல்ல நின்றான்' (168) எனத் தயரதன் சிறப்பிக்கப் பெற்றமையால் அவனுக்குப் பின் அவன் மைந்தனான இராமபிரானுக்கும் அவ்வுரிமையுடைமை காரணமாகவும் கூறப் பெற்றது எனலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Nine leaping arrows crueller than the fire at the end of time
  2. the one lord of the seven worlds shot;
  3. and setting against them sharp arrows ringed with flame,
  4. Karaṉ of the round, banded bow cut them down.

What the poem says

Now Irāmaṉ, lord of all the worlds, shoots nine arrows more deadly than the fire that ends an age. Karaṉ, his bow bent into a circle, answers with nine blazing arrows of his own and cuts them down.

The title 'lord of the seven worlds' suits Irāmaṉ as the heir of Tacarataṉ, whose rule earlier in the poem was said to extend over all seven worlds.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ūḻi eriyiṉ koṭiya pāy pakaḻi oṉpāṉ
ēḻ ulakiṉukkum oru nāyakaṉum eytāṉ;
cūḻ cuṭar vaṭik kaṇai avaṟṟu etir toṭuttē
āḻi vari viṟ karaṉum aṉṉavai aṟuttāṉ.