கம்பராமாயணம் 3131 · ஆரணிய 6.174
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(அவ்வாறு அம்புகளால் இராமபாணங்களை அறுத்த கரன் கல்வியின் - (தான் கற்றறிந்த) வித்தையினால்; கள்ள மாய வினை அமர் - வஞ்சகம் நிறைந்த மாயப் போர்; விளைத்தான் - செய்தான்; பகழி மாரியின் - (தான் எய்த) அம்பு மழையால்; வள்ளல் உருவை மறைத்தான் - இராமபிரானின் திருமேனியை மறையச் செய்தான் (அதைக் கண்ட); அமரர் உள்ளம் உலைவுற்று - தேவர்கள் மனத்தில் நடுக்கமுற்று; ஓடினர் ஒளித்தார் - ஓடியொளிந்து கொண்டார்கள்; வீரனும் - மாவீரனான இராமபிரானும்; வெள் எயிறு இதழ்ப் பிறழ - தன் வெண்மையான பற்கள் உதட்டின் மேல் விளங்க (பற்களால் உதட்டைக் கடித்தவாறு); வெகுண்டான் - கோபங் கொண்டான்.
தேவர்களும் அஞ்சி நடுங்குமாறு கரன் மாயப் போரால் இராமனின் திருமேனியை அம்பு மழையால் மறையச் செய்தான் என்பது. கல்வி: கற்ற வித்தை மந்திரம்.
கள்ள மாய வினையமர்: தனது உண்மையுரு மறைந்தும், வேறு வேறு பல வடிவங் கொண்டும் நின்று பல வகையாகச் செய்யும் போர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- By the arts he had learned he waged a war of deceit and illusion,
- and hid the bountiful one's form under a rain of arrows;
- their hearts shaken, the gods ran and hid;
- and the hero, his white teeth biting his lip, grew angry.
What the poem says
Karaṉ now uses the sorcery he has mastered: hiding his true form and fighting from many shapes at once, he buries Irāmaṉ under a rain of arrows until he cannot be seen.
The gods are so frightened that they run and hide. Irāmaṉ, biting his lip with his white teeth, is roused to anger.