கம்பராமாயணம் 3132 · ஆரணிய 6.175

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இன்று - இப்பொழுது; ஒரு மொய் கணையால் - ஏவிய அம்பு ஒன்றாலே; 'முடிப்பென்' எனா - இவனையழிப்பேன் என்று மனங் கொண்டு; நின்று தொடுத்து - (இராமன் நிலை நின்று ஓர் அம்பை வில்லிலே பூட்டி; உயர் தோள் உற வாங்கினான் - உயர்ந்த தன் தோளையளாவும்படி (வில்லின் நாணினை) வலிய இழுத்தான்; (அப்போது); பிடித்த திண் சிலை - (இராமன்) கையில் பிடித்திருந்த வலிய வில்லானது; பேர் அகல் வான் இடை இடிப்பின் - அகன்ற பெரிய வானத்திலுண்டாகும் இடி முழக்கம் போன்ற; ஓசை பட - ஓசையுண்டாகுமாறு; கடிது இற்றது - விரைவிலே ஒடிந்தது.

ஏ: ஈற்றசை. இவனையழிப்பேனென்று இராமன் கணை தொடுத்து வில்லை வளைக்கும் பொழுது இடி போலப் பேரொலியெழ அந்த வில் முறிந்தது என்பது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Saying, 'Today I will finish him with a single mighty arrow,'
  2. he stood and fitted it, and drew it to his lofty shoulder;
  3. the strong bow he held, with a sound like thunder
  4. in the great wide sky, swiftly snapped.

What the poem says

Irāmaṉ resolves to finish Karaṉ with a single arrow. He takes his stand, fits the shaft and draws the string back to his high shoulder.

But as he bends it, his strong bow breaks with a crack like thunder across the sky.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muṭippeṉ iṉṟu oru moy kaṇaiyāl eṉā
toṭuttu niṉṟu, uyar tōḷ uṟa vāṅkiṉāṉ;
piṭitta tiṇ cilai, pēr akal vāṉiṭai
iṭippiṉ ōcai paṭak kaṭitu iṟṟatē.