கம்பராமாயணம் 3133 · ஆரணிய 6.176

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வெற்றி கூறிய வானவர் - (இராமபிரானின் வெற்றியைப் புகழ்ந்து சொல்லிக் கொண்டிருந்த தேவர்கள்; வீரன் வில் இற்ற போது - இராமபிரானின் வில் ஒடிந்தபொழுது; துணுக்கம் உற்று ஏங்கினார் - நடுக்கமுற்று வருந்தினார்கள்; மற்று ஓர் வெம்சிலை இன்மை மனக் கொளா - (அந்த இராமனுக்கு) வேறொரு கொடிய வில் இல்லாததை மனத்திலே கொண்டு; எம் வலி அற்றது என அஞ்சினார் - எமது வலிமையொழிந்தது என்று அச்சங் கொண்டனர். ஆல் - அசை.

இராமபிரானின் வில் ஒடிந்ததால் இனி அரக்கர்க்கே வெற்றியென்றும், அதனால் தமக்கு உதவி செய்வார் வேறு இல்லாமையறிந்து தம் வலிமையற்றது என்றும், இனி அரக்கரால் பெரிதும் இடருற வேண்டுமென்றும் அஞ்சினார் வானவர் என்பது.

மற்றொரு வெஞ்சிலையின்மை மனக் கொளா - சேம வில்லொன்று துணையில்லாததைக் கருதி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The gods who had been proclaiming victory, when the hero's bow
  2. snapped, were startled and dismayed;
  3. thinking that he had no other cruel bow,
  4. they were afraid, saying, 'Our strength is gone.'

What the poem says

The gods, who had been celebrating Irāmaṉ's victory, are shaken when his bow breaks. He has no spare bow.

They fear the demons will now win, that no one else can help them, and that they will suffer greatly at the demons' hands. 'Our strength is gone,' they say.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veṟṟi kūṟiya vāṉavar, vīraṉ vil
iṟṟa pōtu, tuṇukkam uṟṟu ēṅkiṉār,
maṟṟu or veñ cilai iṉmai maṉak koḷā,
'aṟṟatāl em vali 'eṉa añciṉār.