கம்பராமாயணம் 3134 · ஆரணிய 6.177

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்னும் மாத்திரத்து , ஏந்திய கார்முகம்
சின்னம் என்றும் , தனி என்றும் , சிந்தியான் ,
மன்னர் மன்னவன் செம்மல் , மரபினால்
பின் உறத் தன் பெரும் கரம் நீட்டினான் .

பொருள் · Meaning in Tamil

என்னும் மாத்திரத்து - அவ்வாறு (இராமனது வில்) ஒடிந்த அளவிலே; மன்னவர் மன்னவன் செம்மல் - அரசர்களுக்கு அரசனான தசரத மன்னனின் மகனான இராமன்; ஏந்திய கார்முகம் சின்னம் என்றும் - (தான்) பிடித்திருந்த வில் துணிபட்டதென்பதையும்; தனிமையும் - (தான்) தனித்திருக்கும் தன்மையையும்; சிந்தியான் - மனத்தில் கருதாது; மரபினால் - பழைய போரின் மரபுப் படி; தன் பெருங் கரம் பின் உற நீட்டினான் - தனது நீண்ட கையைப் பின்புறம் செல்லுமாறு நீட்டினான்.

தனிமை - வில்லாகிய துணையொன்றும் இல்லாமை. இராமன் முன்பு பரசுராமனிடம் தான் பெற்ற விட்டுணுதனுசை வருணனிடத்தில் கொடுத்து, அதனை நன்றாகப் பாதுகாத்து வைத்திருக்கும்படியும் உரிய சமயத்தில் கொண்டு வந்து கொடுக்குமாறும் வேண்டியிருந்தானாதலின் அக் குறிப்பால் வில் ஒடிந்தது குறித்து மனந் தளராமல் அந்த வில்லின் வரவுக்காகப் பின்னே கைந் நீட்டினான் என்பார் 'மரபினால் பின்றைத் தன் பெருங்கரம் நீட்டினான்' என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that very moment, giving no thought that the bow he held
  2. was in pieces, nor that he was alone,
  3. the son of the king of kings, as was the custom,
  4. stretched his great hand out behind him.

What the poem says

The instant the bow breaks, Irāmaṉ, son of Tacarataṉ the king of kings, gives no thought to his broken weapon or to the fact that he stands alone.

As a warrior does by long custom, he simply reaches his long arm back behind him. Earlier he had entrusted to Varuṇaṉ, the sea god, the bow of Viṣṇu that he won from Paracurāmaṉ, asking him to keep it safe and bring it when needed. Trusting this, he is calm.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṉum māttirattu, ēntiya kārmukam
ciṉṉam eṉṟum, taṉimaiyum, cintiyāṉ,
maṉṉar maṉṉavaṉ cemmal, marapiṉāl
piṉ uṟat taṉ peruṅ karam nīṭṭiṉāṉ.