கம்பராமாயணம் 3135 · ஆரணிய 6.178

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கண்டு நின்று , கருத்து உணர்ந்தான் என ,
அண்டர் நாதன் தடக் கையின் , அத்துணை ,
பண்டு போர் மழு வாளியைப் பண்பினால்
கொண்ட வில்லை வருணன் கொடுத்தனன் .

பொருள் · Meaning in Tamil

வருணன் - (வானத்திலிருந்து வந்து போரைப் பார்த்து நின்ற) வருண தேவன்; கண்டு நின்று - (இராமன் பின்னால் கையை நீட்டியதைப்) பார்த்து நின்று; கருத்து உணர்ந்தான் என - (அப் பெருமானின் மனக் கருத்தை யறிந்தவனாகி; பண்டு போர் மழு வாளியை - முன்பு போர்க்கு உரிய கருவியாக மழுவைக் கொண்டவனான பரசுராமனிடமிருந்து; பண்பினால் கொண்ட வில்லை - (இராமன்) உரிமையால் கொண்ட விட்டுணுதனுசு என்னும் வில்லை; அத் துணை - அச் சமயத்தில்; அண்டர் நாதன் தடக் கையில் - தேவர்களுக்குத் தலைவனான இராமபிரானின் நெடிய கரத்திலே; கொடுத்தனன் - கொடுத்திட்டான்.

மழுவாளி - மழுவையாள்பவன், பரசுராமன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Seeing it, as if he had understood his thought,
  2. into the great hand of the lord of the gods, at that very moment,
  3. the bow that he had rightfully taken long ago from the wielder of the battle-axe
  4. Varuṇaṉ gave.

What the poem says

Varuṇaṉ, who has been watching the battle from the sky, sees Irāmaṉ's outstretched hand and understands at once what he wants.

At that very moment he places in it the bow of Viṣṇu, which Irāmaṉ had rightfully won long before from Paracurāmaṉ, the warrior who fought with a battle-axe.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṇṭu niṉṟu, karuttu uṇarntāṉ eṉa,
aṇṭar nātaṉ taṭak kaiyil, at tuṇai,
paṇṭu pōr maḻuvāḷiyaip paṇpiṉāl
koṇṭa villai varuṇaṉ koṭuttaṉaṉ.