கம்பராமாயணம் 3137 · ஆரணிய 6.180

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஏற்றினான் இமையாமுன் எடுத்தது ,
கூற்றினாரும் குனிக்கக் குனித்து , எதிர்
ஆற்றினான் , அடல் ஆழி அம் தேர் சரம்
நூற்றினால் நுண் பொடி பட நூறினான் .

பொருள் · Meaning in Tamil

(இவ்வாறு) இமையாமுன் - கண் இமைக்கும் நேரத்திலே; அது எடுத்து - அந்த வில்லையேந்தி; கூற்றினாரும் குனிக்க - யமனும் கண்டு அஞ்சும்படி; குனித்து - வளைத்து; நாண் ஏற்றி - நாணையிழுத்துப் பூட்டி; சரம் நூற்றினால் - நூறு அம்புகளால்; எதிர் ஆற்றினான் அவன் - எதிரே வந்து போர் செய்தவனான அந்த அரக்கனுடைய; ஆழி அம் தேர் - வலிய சக்கரம் பூண்ட அழகிய தேரை; நுண் பொடிபட நூறினான் - நுண்ணிய பொடியாகுமாறு அழித்தான். எதிர்த்த கரனது தேரை இராமபிரான் நூறு அம்புகளால் அழித்தான் என்பது. கூற்றினாரும் குனித்தது - அதுகாறும் இராவணனது ஆணைக்கு அஞ்சி அரக்கரிடம் அணுகாதிருந்து, இப்பொழுது இராமனின் துணை வலியால் இனி அவ்வரக்கர்களைப் பற்றலாம் என்றமையால்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Before an eye could blink he raised it and strung it,
  2. and bent it so that even Death danced, and with a hundred arrows
  3. he smashed the fine wheeled chariot of the one
  4. who fought against him into fine dust.

What the poem says

In the blink of an eye Irāmaṉ strings and bends the new bow and, with a hundred arrows, grinds Karaṉ's wheeled chariot to fine dust.

Death himself dances with joy. Until now, fear of Irāvaṇaṉ's command kept him away from the demons; with Irāmaṉ's strength behind him, he can at last seize them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēṟṟi nāṇ imaiyāmuṉ eṭuttu atu,
kūṟṟiṉārum kuṉikkak kuṉittu, etir
āṟṟiṉāṉ, avaṉ āḻi am tēr caram
nūṟṟiṉāl nuṇ poṭipaṭa nūṟiṉāṉ.