கம்பராமாயணம் 3138 · ஆரணிய 6.181

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(கரன் எந்திரத் தடந் தேர் இழந்தான் - வலிய சக்கரம் பூண்ட தனது பெரிய தேரை இழந்தான்; இழந்து - (அவ்வாறு) தேரையிழந்ததனால்; ஆர்த்து அந்தரத்திடை எழுந்து - ஆரவாரம் செய்து கொண்டு வானத்திலே கிளம்பி; சுந்தரத் தனி வில்லிதன் தோள் எனும் மந்தரத்தில் - அழகிய ஒப்பற்ற வில்லையுடைய இராமபிரானின் தோளாகிய மந்தர மலையின் மேல்; மழையின் - மழை பொழிந்தாற் போல; அம்பு எலாம் வழங்கினான் - (தன்) அம்புகளையெல்லாம் சொரிந்தான்.

தேரை இழந்த அரக்கனான கரன் வானத்தில் ஆர்த்தெழுந்து இராமனுடைய தோள் மேல் மழை போல அம்புகளைச் சொரிந்தான் என்பது. அந்த அம்புகள் இராமனின் தோள்களுக்குச் சிறிதும் அழிவுண்டாக்காமையை 'மந்தரத்தில் மழையின்' என்னும் உவமை விளக்கும். மந்தரம் பாற்கடலைக் கலக்கியது; அது போல இராமனின் தோள் அரக்கர் சேனைக் கடலைக் கலக்குவதென்பார் 'தோளெனும் மந்தரத்தின்' என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He who had lost his great machine-built chariot climbed down,
  2. rose roaring into the sky, and all his arrows
  3. he poured like rain upon the Mantaram
  4. that was the shoulder of the beautiful, peerless bowman.

What the poem says

His chariot destroyed, Karaṉ leaps roaring into the sky and pours all his arrows on Irāmaṉ.

They fall on Irāmaṉ's shoulders like rain on Mount Mantaram and do them no harm at all. The mountain is chosen with care: as Mantaram churned the ocean of milk, Irāmaṉ's arms churn the ocean of the demon army.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1entirat taṭan tēr iḻantāṉ, iḻintu,
antarattiṭai ārttu eḻuntu, ampu elām
cuntarat taṉi villitaṉ tōḷ eṉum
mantarattil maḻaiyiṉ vaḻaṅkiṉāṉ.