கம்பராமாயணம் 3163 · ஆரணிய 7.14

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மேகம் என் துருத்தி கொண்டு , விண்ணவர் தருவும் விஞ்சை
நாகமும் சுரந்த தீம் தேன் , நறும் புனலோடு அளாவித்
தோகையர் துகிலில் தோயும் என்பது ஓர் துணுக்கத்தோடும் ,
சீகர மகர வேலை காவலன் சிந்த , மன் , ஓ .

பொருள் · Meaning in Tamil

விண்ணவர் தருவும் - தேவர்களின் கற்பக மரங்கள் தரும் மலர்களும்; விஞ்சை நாகமும் - வித்தியாதரர்களின் சிறந்த மரங்களின் மலர்களும்; சுரந்த தீந்தேன் - சொரியும் இனிய தேனை; புனலொடும் அளாவி - நன்னீரோடு கலந்து; மேகம் என் துருத்தி கொண்டு - முகில்களாகிற வீசு குழலில் எடுத்துக் கொண்டு; மகர வேலைக் காவலன் - சுறா மீன்கள் நிரம்பிய கடலுக்குத் தலைவனாகிய வருணன்; நவ்வித் தோகையர் துகிலில் தோயும் - (இராவணன் அவையிலுள்ள மானும் மயிலும் போன்ற மகளிரது ஆடைகளில் படியும்; என்பது ஓர் துணுக்கத்தோடும் - என்னும் ஓர் அச்சத்தோடு; சீகரம் சிந்த - சிறு துளிகளாகச் சிதறவும்.......(மன்; ஓ - அசைகள்.

தரு, நாகம் என்பன மரங்கள்; இங்கு முதலாகு பெயர்களாய் மலர்களைச் சுட்டின. அவைக்களத்திலுள்ள மகளிர் ஆடையை நனைத்துவிடுமோ என்று அஞ்சினான். இப்பாடல் முதல் ஆறு கவிகள் நீர்க் கடவுள் முதலியோர் நீர் தெளித்தல் முதலிய பணிவிடைகள் செய்தலைக் கூறும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the clouds for his sprinkler, mixing with water the sweet honey
  2. that flowed from the trees of the gods and the nāga trees of the Vidyādharas,
  3. afraid that it might soak the garments of the women, fawn-eyed and peacock-like,
  4. the guardian of the spray-flung, makara-filled sea sprinkled it in fine drops.

What the poem says

The next verses show the gods serving Irāvaṇaṉ as his household staff. Varuṇaṉ, lord of the ocean, freshens the hall. He mixes water with honey from the flowers of heaven's wish-granting trees and the trees of the Vidyādharas, and sprinkles it using the clouds as his spray.

He scatters only the finest mist, terrified that a drop might wet the clothes of the women of the court, who are graceful as deer and peacocks.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mēkam eṉ turutti koṇṭu, viṇṇavar taruvum viñcai
nākamum curanta tīn tēṉ, puṉaloṭum aḷāvi navvit
tōkaiyar tukilil tōyum eṉpatu ōr tuṇukkattōṭum,
cīkara makara vēlaik kāvalaṉ cinta, maṉṉō.