கம்பராமாயணம் 3164 · ஆரணிய 7.15

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நறை மலர்த் தாதும் , தேனும் நளிர் நெடு மகுட கோடி
முறை முறை இறைஞ்சச் சிந்தி முரிந்து உகும் மணியும் , முத்தும் ,
தறையிடை உகாத முன்னம் தாங்கினன் தழுவி வாங்கித்
துறை தொறும் தொடர்ந்து நின்று சமீரணன் துடைப்ப , மன் , ஓ .

பொருள் · Meaning in Tamil

நறைமலர் - நறுமண மலர்களினின்றும் (சிந்துகிற); தாதும் தேனும் - மகரந்தமும், தேனும்; நளிர் நெடு மகுட கோடி - (அவையினைச் சார்ந்து வந்த அரசர்களின்) பெரிய உயர்ந்த கிரீடத் தொகுதிகள்; முறை முறை அறைய - (நெரிசலால்) ஒன்றோடொன்று உராய்ந்து கொள்ளுதலால்; முரிந்து சிந்தி உகும் - சேத முற்று சிந்திச் சிதறும்; மணியும் முத்தும் - மாணிக்கங்களும் முத்துக்களும்; தறையிடை உகாத முன்னம் - தரையில் விழும் முன்னரே; சமீரணன் - வாயுவாகிய காற்றுக் கடவுள்; தழுவித் தாங்கினன் வாங்கி - ஆங்காங்கு சென்று ஏந்தியெடுத்து; துறை தொறும் தொடர்ந்து நின்று - (மண்டபத்தின்) ஒவ்வோர் இடத்திலும் விடாது சென்று நின்று; துடைப்ப - அவ்விடங்களை மாசுபடாமல் தூய்மை செய்யவும்.... (மன்; ஓ - அசைகள்.

இராவணன் அவையில் குப்பையாக விழுவன மலர் மகரந்தமும் மணிகளுமே ஆகும் எனவும், அவையும் உடனுக்குடன் தூய்மை செய்யப்பட்டன எனவும் கூறப்பட்டன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The pollen and honey of fragrant flowers, and the gems and pearls
  2. that scatter, break and fall as the countless cool, tall crowns knock together again and again,
  3. before they could fall to the floor he caught them, gathered them up and took them away;
  4. following on from place to place, Camīraṇaṉ swept it clean.

What the poem says

Vāyu, the wind god, here called Camīraṇaṉ, works as the palace sweeper. So many crowned kings crowd the hall that their crowns knock together, and gems and pearls break loose and fall along with pollen and honey from the flowers.

He catches all of it before it touches the floor and moves from spot to spot keeping the hall spotless. In Irāvaṇaṉ's court the only litter is flower pollen and jewels, and even that is cleared at once.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1naṟai malart tātum, tēṉum naḷir neṭu makuṭa kōṭi
muṟai muṟai aṟaiyac cinti murintu ukum maṇiyum, muttum,
taṟaiyiṭai ukātamuṉṉam tāṅkiṉaṉ taḻuvi vāṅka
tuṟaitoṟum toṭarntu niṉṟu camīraṇaṉ tuṭaippa, maṉṉō.