கம்பராமாயணம் 3168 · ஆரணிய 7.19

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நல் புதிது அலர் கற்பகத் தருவும் - சிறந்த புத்தம் புது மலர்களைக் கொண்ட கற்பக மரங்களும்; பொய் இலாக் கதிர் நெடு மணிகளும் - தவறுதல் இல்லாத ஒளி உமிழும் பெரிய (சிந்தாமணி போன்ற) தேவரத்தினங்களும்; கறவை ஆன்களும் - பால் சுரக்கும் (காமதேனு போன்ற) பசுக்களும்; நிதிகளும் - தேவருலகில் உள்ள (சங்கநிதி பதுமநிதி போன்ற) பெரு நிதிக் குவியல்களும்; அதிசயம் அளிப்பதற்கு - (இராவணனுக்கு) வியப்பை அளிக்கும் முறையில்; அருள் அறிந்து - (அவன்) அன்பு காட்டும் நேரமறிந்து; முறை முறை நின்று நீட்ட - வரிசை வரிசையாய் நின்று தம் பரிசுகளை வழங்கவும்.. (ஏ - அசை.

இராவணன் அருள் காட்டுவார்க்கு இத்தேவர் உலகச் செல்வங்கள் அவ்வப்போது பரிசுகள் பொழிந்தன எனவும் கூறலாம். கற்பகத் தரு - சந்தானம், மந்தாரம், பாரிசாதம், கற்பகம், அரிசந்தனம் என ஐந்து; தேவமணிகள் - சிந்தாமணி, சூளாமணி; பசுக்கள் காமதேனுவும் அதன்கன்றான நந்தினியும், நிதிகள் - சங்கம், பதுமம், மகாபதுமம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம் என ஒன்பது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Knowing when he would show favour, so as to give him wonders,
  2. the fine wishing trees blossoming afresh, the unfailing
  3. great radiant gems, the milk-giving cows
  4. and the treasures stood in their ranks and held out their gifts.

What the poem says

The treasures of heaven wait on Irāvaṇaṉ: the five wish-granting trees with fresh blossoms, the wish-fulfilling gems such as Cintāmaṇi, the wish-granting cow Kāmatēṉu and her calf, and the nine great treasure hoards of the gods.

They stand in rows, watching for the moment he is pleased, ready to offer him marvels. Another reading is that they shower gifts on whoever he chooses to favour.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aticayam aḷippataṟku aruḷ aṟintu, nal
putitu alar kaṟpakat taruvum, poy ilāk
katir neṭu maṇikaḷum, kaṟavai āṉkaḷum,
nitikaḷum, muṟai muṟai niṉṟu, nīṭṭavē.