கம்பராமாயணம் 3169 · ஆரணிய 7.20
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
குண்டலம் முதலிய - குண்டலம் தொடங்கி அமைந்த; குலம் கொள் பேரணி - பல்வேறு வகையினவாகிய சிறந்த அணிகலன்கள்; மண்டிய பேர் ஒளி - திரண்ட மிக்க ஒளியை; வயங்க வீசலால் - (எங்கும்) விளங்கும்படி வீசுவதால்; இனி உலகம் ஏழினும் - இனி மேல் ஏழு உலகங்களிலும்; இரவு உண்டு கொல் - இருள் செறிந்த பொழுதும் உண்டாகுமோ?; எண்திசை மருங்கினும் - எட்டுத் திக்குகளின் பக்கங்களிலும்; இருள் இன்று என்ன - இருள் காண முடியவில்லையே என்று கூறும் படியாகவும்.....(ஏ - அசை.
ஏழு உலகமாவன - பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகர் லோகம், ஜன லோகம், தபோ லோகம், சத்ய லோகம் என மேல் ஏழும், அதல, விதல, கதல, தராதல ரசாதல, மகாதல, பாதலம் எனக் கீழ் ஏழுமாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Because his earrings and the other noble ornaments of every kind
- flung out their massed great radiance so brightly,
- so that men said, 'Can there be night any more in the seven worlds?
- In all the eight directions there is no darkness,'
What the poem says
Irāvaṇaṉ's earrings and other jewels give off so much light that it seems night can never fall again in any of the seven worlds, and no darkness is left in any of the eight directions.