கம்பராமாயணம் 3170 · ஆரணிய 7.21
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1கங்கையே முதலிய கடவுள் கன்னியர் ,
கொங்கைகள் சுமந்து , இடை கொடியின் ஒல்கிடச்
செங்கையின் அரிசியும் மலரும் சிந்தினர் ,
மங்கலம் முறை முறை கூறி வாழ்த்தவே .
பொருள் · Meaning in Tamil
கங்கையே முதலிய - கங்கை தொடங்கியமைந்த; கடவுட் கன்னியர் - (புண்ணிய தீர்த்தங்களாதிற) தெய்வப் பெண்கள்; கொங்கைகள் சுமந்து - பருத்த தனங்கள் தாங்கிய; இடைகொடியின் ஒல்கிட - தம் இடை கொடி போல் துவள நின்று; செங்கையில் அரிசியும் மலரும் சிந்தினர் - சிவந்த கைகளில் ஏந்திய மங்கல அரிசியையும் மலர்களையும் (இராவணன் மேல்) தூவினராகி; முறை - வரிசையாக; மங்கல மொழி கூறி வாழ்த்த - மங்கல மொழிகள் கூறி வாழ்த்தவும்......(ஏ - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The divine maidens, Kaṅkai first among them,
- bearing their breasts, their waists swaying like creepers,
- scattered rice and flowers from their red hands
- and blessed him with auspicious words in due order.
What the poem says
The goddesses of the sacred rivers, led by Kaṅkai, the Ganges, come forward in turn. Their slender waists sway like vines as they scatter auspicious rice and flowers over Irāvaṇaṉ and chant words of blessing.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṅkaiyē mutaliya kaṭavuṭ kaṉṉiyar,
koṅkaikaḷ cumantu, iṭai koṭiyiṉ olkiṭa
ceṅ kaiyil ariciyum malarum cintiṉar,
maṅkala muṟai moḻi kūṟi vāḻttavē.