கம்பராமாயணம் 3181 · ஆரணிய 7.32

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1'' சொல் பிறந்தார்க்கு இது துணிய ஒண்ணுமே ?
இல் பிறந்தார் தமக்கு இயைவ செய்திலள் ,
கற்பு இறந்தாள் எனக் கரன் கொலாம் இவள்
பொற்பு இறந்த ஆக்கினன் புகன்று '' என்றார் சிலர் .

பொருள் · Meaning in Tamil

சொல் பிறந்தார்க்கு - புகழ் உரைகள் கூறத்தக்க உயர் குடிப் பிறந்த பெண்களுக்கு; இது - (கற்பழியும்) இச் செயல்; துணிய ஒண்ணுமோ? - துணிந்து செய்யக் கூடியதாகுமோ?; அன்று (ஆதலால் இற்பிறந்தார் தமக்கு - நற்குடிப் பிறந்தவர்களுக்கு; இயைவ செய்திலள் - பொருந்திய செயல் இவள் செய்திலள்; கற்பு இறந்தாள் என - கற்பு நெறி தவறினாள் என்று; இவள் பொற்பு அறை ஆக்கினன் போல் கரன் கொல் ஆம் - கரன் இப் பெண்ணின் அழகை அழியும்படி செய்தான் போலும்; என்றார் சிலர் - எனச் சில அரக்கர் எண்ணினர்.

இவள் ஒழுக்கக் கேடு கண்டு கரன் உறுப்பு அரிந்து தண்டித்தான் என்று சிலர் கருதினர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Could a woman of renowned birth dare such a thing?
  2. She has not acted as befits one born of a good house;
  3. it must be Karaṉ who, finding she had broken her chastity,
  4. has ruined her beauty,' said some.

What the poem says

Some demons suspect the worst of Cūrppaṇakai herself. A woman of good family would never dare to break her chastity, and she has not behaved as one born in a noble house should.

Perhaps her brother Karaṉ discovered some misconduct and punished her by cutting off her nose and ears.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' colpiṟantārkku itu tuṇiya oṇṇumō?
iṟpiṟantār tamakku iyaiva ceytilaḷ,
kaṟpu iṟantāḷ eṉak karaṉkolām ivaḷ
poṟpu aṟai ākkiṉaṉ pōl '' eṉṟār cilar.