கம்பராமாயணம் 3184 · ஆரணிய 7.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கரை அரு திரு நகர் - கடற் கரையில் அரிதின் அமைந்த செல்வம் மிக்க இலங்கையின்; கருங்கண் நங்கைமார் - கரிய கண்கள் கொண்ட அரக்கர் மாதர்; நிரை வளைத் தளிர்க் கரம் - வளையல் வரிசைகள் பூண்ட தளிர்போன்ற மென் கரங்களை; நெரித்து நோக்கினர் - பிசைந்த கோலத்தில் (சூர்ப்பணகையை) உற்று நோக்கினர்; பிரை உறு பால் என - பிரை குத்திய பாலைப் போல; நிலையின் பின்றிய உரையினர் - இயல்பு குலைந்த தடுமாறிய உரையினராக; ஒருவர் முன் ஒருவர் ஓடினார் - (யாது நேருமோ என அஞ்சி) ஒருவருக்கு முன் ஒருவராக ஓடிச் சென்றனர்.
கரைதல் சொல்லுதல் எனக் கொண்டு கரை அரு திருநகர்: புகழை எடுத்துச் சொல்லுதலுக்கு அரிய செல்வ நகர் எனவும் கொள்ளலாம். (கரை - முதனிலைத் தொழிற் பெயராகக் கொள்ளின் இப் பொருளாம்).
ஆங்கிலம் · English translationAI
Translation
- The dark-eyed women of the glorious city beyond telling
- wrung their tender hands with rows of bangles and stared;
- with words that had lost their nature, like milk that has been curdled,
- they ran, one ahead of another.
What the poem says
The dark-eyed women of Ilaṅkai, a city whose glory is beyond words, wring their bangled hands as they stare at Cūrppaṇakai.
Their speech turns confused, like milk curdled by a starter, and they run off one after another in fear of what will follow.