கம்பராமாயணம் 3186 · ஆரணிய 7.37

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கள்ளுடை வள்ளமும் , களித்த தும்பியும் ,
உள்ளமும் ஒரு வழி கிடக்க ஓடினார் ,
வெள்ளமும் நாண் உற விரிந்த கண்ணினார் ,
தள்ளுறும் மருங்கினர் , தழீஇக் கொண்டு ஏங்கினார் .

பொருள் · Meaning in Tamil

வெள்ளமும் நாண் உற - பெருங்கடலும் தோற்றுப்போகும் படி; விரிந்த கண்ணினார் - விரிந்த கண்களையுடைய அரக்க மகளிர்; கள்ளுடை வள்ளமும் - (தாம் அருந்தும்) மதுக் கிண்ணங்களும்; களித்த தும்பியும் - மதுவை மொய்த்து ஆரவாரிக்கும் வண்டுகளும்; உள்ளமும் - மதுவில் ஈடுபட்ட மனமும் (ஆகியவற்றை); ஒருவழிக் கிடக்க - ஒரு புறத்திலே விட்டு விட்டு; ஓடினார் - ஓடிச் சென்றார்; தள்ளுறும் மருங்கினர் - துவண்ட இடையினை உடையராய்; தழீஇக் கொண்டு ஏகினார் - (ஒருவரை யொருவர் தழுவிக் கொண்டு செல்லலாயினர்.

இனி, சூர்ப்பணகை நிலை கண்டு கண்ணீர் வெள்ளம் பொழிந்த கண்களோடு, மது முதலியவற்றை ஒதுக்கிவிட்டு, அவளைத் தழுவிச் சென்றனர் எனவும் கூறுவர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Leaving their cups of wine, the drunken bees
  2. and their hearts lying all in one place, they ran,
  3. women with eyes so wide they shamed the sea,
  4. with swaying waists, holding one another as they went.

What the poem says

Other demon women abandon their wine cups, the bees buzzing drunkenly over them, and their own wine-soaked thoughts. Their eyes are wider than the ocean, and they hurry off clinging to each other, their slender waists swaying.

Another reading has them, eyes streaming with a flood of tears, putting their drink aside and going to embrace Cūrppaṇakai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaḷḷuṭai vaḷḷamum, kaḷitta tumpiyum,
uḷḷamum oru vaḻik kiṭakka ōṭiṉār,
veḷḷamum nāṇ uṟa virinta kaṇṇiṉār,
taḷḷuṟum maruṅkiṉar, taḻīik koṇṭu ēkiṉār.