கம்பராமாயணம் 3187 · ஆரணிய 7.38
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1நாந்தக உழவர்மேல் நாட்டும் தண்டத்தர் ,
காந்திய மனத்தினர் , புலவி கை மிக
சேந்த கண் அதிகமும் சிவந்து நீர் உக ,
வேந்தனுக்கு இளையவள் தாளின் வீழ்ந்தனர் .
பொருள் · Meaning in Tamil
(வேறு சில பெண்கள்); நாந்தக உழவர் மேல் - வாள் உழவரான தம் கணவர்மேல்; நாடும் தண்டத்தர் - (ஊடல் காரணமாக) தண்டனை தர விரும்பியவர்களாய்; காந்திய மனத்தினர் - எரியும் நெஞ்சினராய்; புலவி கைம்மிக - ஊடல் மிகக் கொண்டு; சேந்த கண் - சினத்தால் சிவந்த கண்கள்; அதிகமும் சிவந்து நீர் உக - (இப்போது சூர்ப்பணகையைக் கண்டு) மேலும் கலங்கச் சிவந்து கண்ணீர் சிந்த; வேந்தனுக்கு இளையவள் - இராவணன் தங்கையின்; தாளில் வீழ்ந்தனர் - பாதங்களில் வீழ்ந்தனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Women who had been planning punishments for their husbands, who plough with the sword,
- their hearts burning, their sulking grown past bounds,
- their reddened eyes turning redder still and shedding tears,
- fell at the feet of the king's younger sister.
What the poem says
Some women had been in the middle of a lovers' quarrel, eyes already red with anger as they plotted how to punish their warrior husbands.
On seeing Cūrppaṇakai, their eyes grow redder still and fill with tears, and they throw themselves at her feet.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nāntaka uḻavarmēl nāṭum taṇṭattar,
kāntiya maṉattiṉar, pulavi kaimmikac
cēnta kaṇ atikamum civantu nīr uka,
vēntaṉukku iḷaiyavaḷ tāḷil vīḻntaṉar.