கம்பராமாயணம் 3188 · ஆரணிய 7.39
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(மற்றும் சில மகளிர்; பொன்தலை மரகதப் பூகம் - பொன்னாய்ப் பழுத்த காய்கள் குலுங்கும் பச்சை நிறக் கமுக மரங்களின்; நேர்வுறச் சுற்றிய - (கழுத்து) நோகும்படியாகக் கட்டப்பட்டுள்ள; மணிவடம் தூங்கும் ஊசலின் - மணிகள் பதித்த கயிற்றில் தொங்கும் ஊஞ்சலில் அமர்ந்து; முற்றிய ஆடலில் முனிவுற்று - முனைப்பாக ஆடிக் கொண்டிருந்த ஆடலை (சூர்ப்பணகையைக் கண்டதால்) வெறுத்து; ஏங்கினார் - துயரம் கொண்ட நிலையில்; சிற்றிடை அலமர - மெல்லிடை நோகும் படி; தெருவு சேர்கின்றார் - தெருக்களில் சென்று கூடினர்.
ஊஞ்சல் அமைக்கப்பட்டுள்ள அழகும், அதற்கு மாறான சோகமும் முரணுற அமைந்துள்ளன. 'பூகம் நோவுற' என்னும் கூற்று மரங்களுக்கும் உயிருண்டு என்ற சிந்தனையைப் புலப்படுத்திற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Turning in disgust from the full swing of their play on swings
- hung from jewelled ropes tied so tight round emerald areca palms with golden crowns that it hurt them,
- they grieved,
- and, their slender waists aching, gathered in the streets.
What the poem says
Other women had been swinging on swings hung by jewelled ropes from emerald-green areca palms heavy with golden nuts, ropes tied so tightly that the palms themselves were hurt.
Seeing Cūrppaṇakai, they lose all pleasure in their play and, grieving, crowd into the streets. The image of the hurting trees reflects the belief that trees too have life and feeling, and the pretty swings contrast sharply with the sorrow.