கம்பராமாயணம் 3192 · ஆரணிய 7.43

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''

பொருள் · Meaning in Tamil

அங்கையின் அரன்கயிலை கொண்ட - தன் (இருபது) கரங்களால் சிவபிரான் கயிலை மலையை எடுத்த; திறல் ஐயன் - ஆற்றல் மிக்க நம் தலைவன் (இராவணனுடைய); தங்கை நிலை - தங்கையாகிய சூர்ப்பணகையின் கதியே; இங்கு இது கொல் - இப்போது இவ்வாறாயிற்றோ?; என்று - என எண்ணி; குலை கோதை மங்கையர்கள் - அவிழ்ந்து சிதறிய கூந்தலை உடைய அரக்க மகளிர் சிலர்; தளர்கின்றார் - வருத்தம் கொண்டவர்களாய்; கொங்கை இணை செங்கையின் மலைந்து - இரு மார்பகங்களையும் தமது சிவந்த கரங்களால் அடித்துக் கொண்டு; நங்கை அடி - சூர்ப்பணகை காலடியில்; வந்து விழுகின்றார் - வந்து வீழ்கின்றவர்களாயினர்.

இராவணன் ஆற்றலை நினைந்து, அவன் தங்கைக்கும் இந்நிலையோ என்று கவலை கொண்டனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Is this, here, the state of the sister of our mighty lord
  2. who lifted Araṉ's Kailāsa in his hands?' they said, and drooping,
  3. beating their two breasts with their red hands, their garlands in disarray,
  4. the women came and fell at the lady's feet.

What the poem says

Remembering Irāvaṇaṉ's strength, the lord who lifted Civaṉ's Mount Kailāsa in his hands, the women cannot believe his sister has come to this.

Their hair and garlands loose, they beat their breasts with their hands, and come and fall at Cūrppaṇakai's feet.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' aṅkaiyiṉ araṉ kayilai koṇṭa tiṟal aiyaṉ
taṅkai nilai iṅku itukol? '' eṉṟu taḷarkiṉṟār,
koṅkai iṇai ceṅ kaiyiṉ malaintu, kulai kōtai
maṅkaiyarkaḷ naṅkai aṭi vantu viḻukiṉṟār.