கம்பராமாயணம் 3198 · ஆரணிய 7.49

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1மடித்த பில வாய்கள் தொறும் வந்து புகை முந்தத்
துடித்த தொடர் மீசைகள் சுறு கொள உயிர்ப்பக்
கடித்த கதிர் வாள் எயிறு மின் கனல , மேகத்து
இடித்த உருமு ஒத்து உரறி ,'' யாவர் செயல் ? '' என்றான் .

பொருள் · Meaning in Tamil

மடித்த - சினத்தால் உதடு அதுக்கிய; பில வாய்கள் தொறும் - மலைக் குகை போன்ற பத்து வாய்களிலும்; வந்து புகை முந்த - சினத் தீயின் புகை பொங்க வர; துடித்த தொடர் மீசைகள் - கோபத்தால் துடிதுடிக்கும் அடர்ந்த மீசைகள்; சுறுக்கொள உயிர்ப்ப - பொசுங்கி நாறும்படி பெருமூச்சு வெளிப்பட; கடித்த கதிர் வாள் எயிறு - இறுக மென்ற, ஒளி வீசும் கூரிய பற்கள்; மின் கஞல - மின்னல் போல் பிரகாசிக்க; மேகத்து இடித்த உரும் ஒத்து உரறி - முகில்களில் ஓசை செய்து எழும் இடி முழக்கம் போல் பேரொலி செய்து; 'யாவர் செயல்' என்றான் - 'இது யாருடைய செயல்' என்று வினவினான்.

தங்கை நிலைகண்ட இராவணன் கொண்ட சினமும் கேட்ட வினாவும் இப்பாடலில் அமைந்துள்ளன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As smoke came pouring from each of his cave-like mouths with curled lips,
  2. as he breathed so hard that his twitching, bristling moustaches were singed,
  3. as his clenched, gleaming, sharp teeth flashed like lightning, roaring
  4. like the thunder that crashes in the clouds, he said, 'Whose deed is this?'

What the poem says

Irāvaṇaṉ's rage is described physically. Smoke from the fire of his anger rises from his ten cave-like mouths with their curled lips; his breath is so hot it singes his twitching moustaches; his clenched teeth flash like lightning.

With a roar like thunder bursting from the clouds, he demands: 'Who did this?'

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṭitta pila vāykaḷtoṟum vantu pukai munta
tuṭitta toṭar mīcaikaḷ cuṟukkoḷa uyirppa
kaṭitta katir vāḷ eyiṟu miṉ kañala, mēkattu
iṭitta urum ottu uraṟi,'' yāvar ceyal? '' eṉṟāṉ.