கம்பராமாயணம் 3201 · ஆரணிய 7.52

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1'' மன்மதனை ஒப்பர் மணி மேனி ; வட மேருத்
தன் மதன் அழிப்பர் திரள் தோளின் வலி தன்னால் ;
என் அதனை இப்பொழுது இசைப்பது ? உலகு ஏழின்
நல் மதன் அழிப்பர் ஒர் இமைப்பின் நனி வில்லால் . ''

பொருள் · Meaning in Tamil

மணி மேனி - (அம்மானிடர் மணி போல் ஒளி வீசும் மேனியழகால்; மன்மதனை ஒப்பர் - காமனை ஒத்திருப்பார்கள்; திரள் தோளின் வலி தன்னால் - திரண்ட தோள்களின் வலிமையைக் கணக்கிட்டால்; வடமேருத் தன் எழில் அழிப்பர் - வடக்கில் உள்ள மேரு மலையின் அழகையும் தோல்வியுறச் செய்வர்; என் அதனை இப்பொழுது இசைப்பது? - அவ்வாற்றல்களை இங்கே இப்போது விரித்துப் பேசி என்ன பயன்; வில்லால் - (தம்) வில்லாற்றலால்; ஓர் இமைப்பின் - கண்ணிமைப் பொழுதில்; உலகு ஏழின் நல்மதம் நனி அழிப்பர் - ஏழு உலகங்களின் வலிமை மிக்காரை யெல்லாம் மிக ஆற்றலோடு அழிக்க வல்லவர் ஆவர்.

இராம இலக்குவரின் அழகு, வலிமை இரண்டினையும் இப்பாடலில் கூறினாள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'In their jewel-bright bodies they are like Maṉmataṉ; northern Mēru
  2. they would put to shame by the strength of their rounded shoulders;
  3. why speak of that now? In a single blink, with their bows,
  4. they could utterly crush the pride of all seven worlds.'

What the poem says

Cūrppaṇakai describes the two brothers. Their shining bodies are as beautiful as Maṉmataṉ, the god of love, and their powerful shoulders outdo Mount Mēru.

But why dwell on that, she says: with their bows they could crush the pride of all seven worlds in the blink of an eye. She praises both their beauty and their might.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' maṉmataṉai oppar maṇi mēṉi; vaṭa mērut
taṉ eḻil aḻippar tiraḷ tōḷiṉ valitaṉṉāl;
eṉ ataṉai ippoḻutu icaippatu? ulaku ēḻiṉ
nal matam aḻippar ōr imaippiṉ naṉi villāl. ''