கம்பராமாயணம் 3202 · ஆரணிய 7.53
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(மேலும் அவர்கள்); முனித்தலைவர் பால் வந்தனை உடையர் - தவ நலம் சான்ற பெரியோரிடம் வணக்கம் செய்யும் இயல்பினர்; வானத்து இந்துவின் முகத்தர் - விண்ணில் விளங்கும் மதியம் போல் முகம் உடையவர்; எறி நீரில் - அலை வீசும் நீர் நிலையில்; எழு நாளக் கந்த மலரை - வளரும் தண்டோடு கூடிய மண மிகு தாமரைப் பூவை; பொருவு கண்ணர் - ஒத்த கண்களை உடையவர்; கழல் கையர் - அம்மலர் போன்றே அமைந்த காலும் கரமும் உடையவர்; அந்தம் இல் தவத் தொழிலர் - எல்லையற்ற தவமே கடமையாகக் கொண்டவர்; ஆர் அவரை ஒப்பார்? - அவர்களுக்கு நிகராக யாரைக் கூற முடியும்? (எவரையும் கூற முடியாது). முனிவரை வணங்குவரென்றமையின் பிறர் யாரையும் வணங்க மாட்டார் என உணர்த்தினாள். இப்பாடலிலும் அவர்கள் அழகும் பண்பும் உரைக்கப்பட்டன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'They pay homage to the chief among sages; their faces
- are like the moon in the sky; their eyes, their feet and their hands
- are like the fragrant flowers that rise on stalks from rippling water;
- their austerities are endless; who could equal them?'
What the poem says
Cūrppaṇakai goes on. The brothers bow only to great sages, implying that they bow to no one else, Irāvaṇaṉ included.
Their faces are like the moon, and their eyes, feet and hands are like lotuses rising on their stalks from rippling water. They live a life of endless austerity, and no one can be compared with them.