கம்பராமாயணம் 3203 · ஆரணிய 7.54
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(இன்னும் அவர்கள்) வற்கலையர் - மரவுரி தரித்திருப்பர்; வார் கழலர் - நெடிய வீரக்கழல் அணிந்திருப்பர்; மார்பின் அணி நூலர் - மார்பில் முப்புரி நூல் அணிந்திருப்பர்; விற்கலையர் - வில்லின் கலையெல்லாம் அறிந்திருப்பர்; வேதம் உறை நாவர் - மறை பயின்ற நாவை உடையவர்; தனி மெய்யர் - தனிச் சிறப்பு மிக்க மேனி அழகுடையவர்; உற்கு அலையர் - உனக்கு அஞ்சாதவர்கள்; உன்னை ஓர் துகள் துணையும் உன்னார் - ஒரு சிறு தூசியளவு கூட உன்னை மதியாதவர்; சொற் கலை என - சொல்லால் அமைந்த கலைப் படைப்புப் போல; தொலைவு இல் தூணிகள் சுமந்தார் - அழிவில்லாத அம்புகளைக் கொண்ட அம்பறாத் தூணிகள் தாங்கினவர்கள்.
மரவுரியும் அவர்க்கு அழகானமையின் வற்கலையர் என்றாள். கரன் முதலியோரை அழித்த அருமை விளங்க விற்கலையர் என்றாள். உன்னை அவர்கள் மதிக்கவில்லை என்பதை எனக்கு நேர்ந்தவையே காட்டும் என்று குறிப்பால் காட்டினாள். இதனால் இராவணனின் சினத்தையும் தூண்டினாள். சொல்லும் அம்பும் இணையானவை 'சொல்லொக்கும் கடிய வேகச் சுடுசுரம்' எனத் (388) தாடகை வதைப் படலத்தும் கூறினார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'They wear bark cloth, long anklets, and the sacred thread across the chest;
- they are masters of the bow, with the Veda dwelling on their tongues, peerless in form;
- they know no fear, and do not think of you as worth a speck of dust;
- they carry quivers that never empty, like the art of speech.'
What the poem says
Cūrppaṇakai completes her picture: the brothers wear bark garments, which only add to their beauty, warriors' anklets and the sacred thread. They are masters of archery, as their slaughter of Karaṉ's army proved, and the Veda is always on their lips.
Then she goads her brother: they do not fear him and do not value him at a speck of dust, as what they did to her shows. Their quivers never run out, like the art of a great poet whose words never fail, and arrows and words are often compared in the poem.