கம்பராமாயணம் 3205 · ஆரணிய 7.56

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1'' மாரர் உளரே இருவர் ஓர் உலகின் வாழ்வார் ?
வீரர் உளரே அவரின் வில்லதனின் வல்லார் ?
ஆர் ஒருவர் அன்னவரை ஒப்பவர்கள் ? ஐயா !
ஓரொருவரே இறைவர் மூவரையும் ஒப்பார் . ''

பொருள் · Meaning in Tamil

ஐயா - ஐயனே; ஓர் உலகில் வாழ்வார் - ஒரே உலகின்கண் வாழ்கின்றவர்களாம்; இருவர் மாரர் உளரே? - இரண்டு மன்மதர்கள் இருக்கின்றார்களா?, அவரின் வில்லதனின் வல்லார் - அவர்களைக் காட்டிலும் வில் வலிமையில் வல்லவர்; வீரர் உளரே - (வேறு) வீரர்களும் இருக்கின்றார்களா?, ஒருவர் அன்னவரை ஒப்பவர்கள் ஆர் - அவர்களுக்குச் சமானமாக உள்ளவர் எவரேனும் உண்டா?; ஓர் ஒருவரே இறைவர் மூவரையும் ஒப்பார் - அவர்களில் ஒவ்வொருவருமே மும்மூர்த்திகளுக்கு நிகரானவர்களாய் இருப்பார்கள்.

மும்மூர்த்திகளும் சேர்ந்தால் இவர்களில் ஒருவருக்குச் சமமாவர் என இவர்களை உயர்த்திக் கூறினாள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Are there two Love-gods living together in a single world?
  2. Are there heroes mightier than they in the art of the bow?
  3. Who is there that could equal them? My lord,
  4. each one of them alone is a match for all three gods.'

What the poem says

Cūrppaṇakai praises the two brothers extravagantly. They are as beautiful as two Kāmas, the god of love, side by side; no warrior surpasses them in archery; no one is their equal. Each of them by himself, she says, equals the three great gods, Brahmā, Viṣṇu and Śiva, put together.

Her praise serves a purpose: she wants Irāvaṇaṉ to see them as worthy foes, and her own infatuation with Irāmaṉ shows through.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' mārar uḷarē iruvar ōr ulakil vāḻvār?
vīrar uḷarē avariṉ villataṉiṉ vallār?
ār oruvar aṉṉavarai oppavarkaḷ? aiyā!
ōr oruvarē iṟaivar mūvaraiyum oppār. ''