கம்பராமாயணம் 3206 · ஆரணிய 7.57
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(அவர்கள்) தரா வலய நேமி உழவன் - பூமி முழுவதையும் தன் ஆட்சிச் சக்கரத்தால் கட்டுப்படுத்தியவனான; தயரதப் பேர் - தயரதன் என்னும் பெயரை உடைய; பராவரு நலத்து ஒருவன் - புகழ்ந்துரைக்க ஒண்ணாத சிறப்புக்கள் கொண்ட ஒரு மன்னனது; மைந்தர் - மக்கள்; பழி இல்லார் - பழி கூறலாகாத சிறப்புடையவர்; அவன் விளம்ப - அத்தயரதன் இட்ட கட்டளையால்; விரா வரு வனத்து உறைகின்றார் - நெருங்குதற்கு அரிய காட்டில் வசிக்கின்றார்கள்; பெயர் இராமனும் இலக்குவனும் என்பர் - அவர்கள் முறையே இராமன் என்றும் இலக்குவன் என்றும் பெயருடையார்; என்றாள் - என்று (சூர்ப்பணகை) கூறினாள்.
இராமலக்குவர் வனம் புகுந்த வரலாறு கூறினாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'They are sons of one whose goodness is beyond all praise, named Tacarataṉ,
- who ploughs the whole round earth with the wheel of his rule; they are without blemish;
- at his command they dwell in a forest hard to enter;
- their names, men say, are Irāmaṉ and Ilakkuvaṉ,' she said.
What the poem says
Cūrppaṇakai identifies the brothers. They are the blameless sons of King Tacarataṉ, whose rule covers the whole earth, and they live in the wild forest because their father ordered it. Their names are Irāmaṉ and Ilakkuvaṉ.
The king who ploughs the earth with his wheel is a stock image of a universal monarch: the wheel of his authority runs over every land.