கம்பராமாயணம் 3207 · ஆரணிய 7.58

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1'' மருந்து அனைய தங்கை மணி நாசி வடி வாளால்
அரிந்தவரும் மானிடர் , அரிந்தும் உயிர்வாழ்வார் ;
விருந்து அனைய வாளொடும் விழித்து , இறையும் வெள்காது
இருந்தனன் இராவணனும் இன் உயிர் கொடு இன்னும் ! ''

பொருள் · Meaning in Tamil

மருந்தனைய தங்கை - அமுதம் போல் அடியவளான தங்கை சூர்ப்பணகையின்; மணிநாசி - அழகிய மூக்கை; வடிவாளால் அரிந்தவரும் - கூர்வாள் கொண்டு அறுத்தெறிந்தவர்களும்; மானிடர் - (இழிந்த) மனிதர்களே ஆவர்; அறிந்தும் உயிர் வாழ்வார் - (அங்ஙனம்) தாக்கப்பட்டாள் என் தங்கை என அறிந்த பின்னும் உயிர் பிழைத்திருந்தனர்; இராவணன் - இராவணனாகிய நான்; விருந்தனைய வாளொடும் - புதிது போலும் என் வாளொடும், இன்னும் விழித்து - இன்னும் விழித்துக் கொண்டு; இறையும் வெள்காது - சற்றும் வெட்கமின்றி; இன்னுயிர் கொடு - இனிய உயிரைச் சுமந்து கொண்டு; இருந்தனன் - இருக்கின்றேன்!

மனிதர்கள் தீங்கிழைத்த பின்னும் அவர்களை மாய்க்காமல் இருக்கும் தன்னையே நொந்து கொள்கிறான் இராவணன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Those who cut off with a sharp sword the lovely nose of my sister, sweet as nectar,
  2. are mere men, and even knowing this, they live on;
  3. and with a sword as fresh as new, eyes open, not the least ashamed,
  4. Irāvaṇaṉ sits here still, clinging to his precious life!'

What the poem says

Irāvaṇaṉ turns his anger on himself. The people who mutilated his beloved sister are only humans, and they are still alive though they know whose sister she is. Meanwhile he, Irāvaṇaṉ, sits with his sword unused, wide awake and shameless, still holding on to life.

He speaks of himself in the third person, which sharpens the self-reproach: the great Irāvaṇaṉ has let mere men insult him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' maruntu aṉaiya taṅkai maṇi nāci vaṭi vāḷāl
arintavarum māṉiṭar, aṟintum uyir vāḻvār;
viruntu aṉaiya vāḷoṭum viḻittu, iṟaiyum veḷkātu
iruntaṉaṉ irāvaṇaṉ iṉ uyirkoṭu iṉṉum! ''