கம்பராமாயணம் 3209 · ஆரணிய 7.60

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1'' மூளும் உளது ஆய பழி என் வயின் முடித்தோர்
ஆளும் உளவாம் , அவரது ஆர் உயிரும் உண்டாம் ,
வாளும் உளது , ஓத விடம் உண்டவன் வழங்கும்
நாளும் உள , தோளும் உள , நானும் உளென் அன்றோ ? ''

பொருள் · Meaning in Tamil

மூளும் உளதாய பழி - உருவாகி வந்திருக்கும் அவமானத்தை, என் வயின் முடித்தோர் - என்பால் இழைத்த; ஆளும் உளதாம் - மானிடர்கள் இன்னும் இருந்தனர்; அவரது ஆர் உயிரும் உண்டாம் - அவர்களின் இனிய உயிரும் இன்னும் அழிக்கப்படாமல் இருந்தது; வாளும் உளது - (என் கை) வாளும் வறிதே இருந்தது; ஓதவிடம் உண்டவன் - கடலில் பிறந்த நஞ்சினை உண்ட சிவபெருமான்; வழங்கும் நாளும் உள - அளித்த என் ஆயுட் காலமும் இருந்தது; தோளும் உள நானும் உளென் அன்றோ? - (பயனின்றி) என் தோள்களும் உள்ளன, நானும் (செயலின்றி) இருந்தேன் அல்லவா?

வாளும், தோளும் பிறவுமாம் வல்லமை பெற்றிருந்தும் பழிக்கு ஆளானேன் என்ற தன்னிரக்கம் புலப்படுத்தப்படுகிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The men who brought on me this mounting disgrace
  2. are still about, and their precious lives are still in them;
  3. my sword is here too; the days of life granted by him who drank the ocean's poison
  4. are here; my shoulders are here; and I too am here, am I not?'

What the poem says

Irāvaṇaṉ lists everything that still exists while the insult goes unpunished: the men who shamed him, their lives, his own sword, the long life Śiva granted him, his many shoulders, and he himself. All of it is there and none of it has been used.

Śiva is called the one who swallowed the poison that rose from the churned ocean. The repeated 'is here' shows his bitter self-pity at having all this power and still bearing the disgrace.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' mūḷum uḷatu āya paḻi eṉvayiṉ muṭittōr
āḷum uḷatām, avaratu ār uyirum uṇṭām,
vāḷum uḷatu, ōta viṭam uṇṭavaṉ vaḻaṅkum
nāḷum uḷa, tōḷum uḷa, nāṉum uḷeṉ aṉṟō? ''