கம்பராமாயணம் 3222 · ஆரணிய 7.73
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தோளையே சொல்லுகேனோ? - (அவளுடைய) தோளின் அழகை எடுத்துக் கூறுவேனோ?; சுடர் முகத்து உலவுகின்ற வாளையே சொல்லுகேனோ? - ஒளி வீசும் முகத்தில் திரிகின்ற வாளை மீன் போன்ற கண்ணழகை எடுத்துக் கூறுவேனோ?; அல்லவை வழுத்துகேனோ? - அல்லாது பிற உறுப்புக்களை எடுத்துக் கூறுவேனோ?, மீளவும் திகைப்பது அல்லால் - மறுபடியும் திகைத்துப் போகின்றேனே அன்றி; தனித் தனி விளம்பல் ஆற்றேன் - ஒவ்வோர் உறுப்பழகையும் தனியே வருணிக்க வலிமை இல்லேன்; நான் உனக்கு உரைப்பது என்னோ? - நான் உனக்கு விவரித்துச் சொல்ல வேண்டுவது யாதுமில்லை; நாளையே காண்டி அன்றே - நாளைக்கு நீயே காணப் போகின்றாய் அல்லவா?
இவ்வாறு கூறுவதன் மூலம் சீதையைக் காணும் ஆவலை இராவணன் உள்ளத்தே மூட்டுகின்றாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Shall I speak only of her shoulders? Shall I speak of the vāḷai fish
- that roam in her shining face? Or shall I praise the rest?
- I can only be bewildered again and again; I cannot describe them one by one;
- you will see her tomorrow, will you not? Why should I tell you?'
What the poem says
Cūrppaṇakai gives up her catalogue. Should she describe Cītai's shoulders, or her eyes, which dart in her bright face like vāḷai fish, or the rest of her? Every attempt leaves her bewildered.
She ends by saying there is no need: Irāvaṇaṉ will see Cītai for himself tomorrow. The remark is calculated to make him impatient to see her.