கம்பராமாயணம் 3223 · ஆரணிய 7.74

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
பாட வேறுபாடு · Project Madurai reads
1'' வில் ஒக்கும் நுதல் என்றாலும் , வேல் ஒக்கும் விழி என்றாலும் ,
பல் ஒக்கும் முத்து என்றாலும் , பவளத்தை இதழ் என்றாலும் ,
சொல் ஒக்கும் ; பொருள் ஒவ்வா ஆல் ; சொல்லலாம் உவமை உண்டோ ?
நெல் ஒக்கும் புல் என்றாலும் , நேர் உரைத்தாக வற்றோ ?

பொருள் · Meaning in Tamil

வில் ஒக்கும் நுதல் என்றாலும் - வில்லைப் போல் நெற்றி அமைந்திருக்கிறது என்று சொன்னாலும்; விழி வேல் ஒக்கும் என்றாலும் - கண்கள் வேல் போல் விளங்குகின்றன என்று சொன்னாலும்; பல் முத்து ஒக்கும் என்றாலும் - பற்கள் முத்துக்கள் போன்றிருக்கும் என்று சொன்னாலும்; பவளத்தை இதழ் என்றாலும் - பவளமே இவள் இதழ்கள் என்று சொன்னாலும்; சொல் ஒக்கும் - உவமிக்கப்படும் சொல் பொருத்தம் ஆகலாம்; (அல்லாது), பொருள் ஒவ்வாதால் - (சீதையின் உறுப்பழகை உணர்த்தும் முழுமையான) பொருளால் பொருந்தாது; சொல்லல் ஆம் உவமை உண்டோ - (எனவே) சொல்லத்தக்க உவமை வேறு ஏதேனும் உளதாகுமோ? (இல்லை); புல் ஒக்கும் நெல் - புல்லைப் போன்றிருக்கும் நெல்; என்றாலும் - என்று கூறினாலும்; நேர் உரைத்தாக அற்றோ? - பொருத்தமாக கூறியதாகக் கருத முடியுமா? (பொருந்தாது).

வருணனைக்கு அப்பாற்பட்ட பொலிவும் அழகும் சீதைபால் பொருந்தியுள்ளன எனவும், அதனால் நீயே நேரிற் காண்பதே பொருத்தம் எனவும் சூர்ப்பணகை உணர்த்துகின்றாள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Though one says her brow is like a bow, though one says her eyes are like spears,
  2. though one says her teeth are like pearls, though one calls coral her lips,
  3. the words may fit, but the things do not; is there any likeness that can be spoken?
  4. Though one says rice is like grass, is that speaking truly?'

What the poem says

Cūrppaṇakai explains why ordinary comparisons fail. A poet may say Cītai's brow is a bow, her eyes spears, her teeth pearls and her lips coral. The words may sound right, but the things themselves fall far short of her.

It is like saying that the rice plant resembles grass: true in a way, but it misses everything that makes rice valuable. Cītai's beauty is beyond description, so Irāvaṇaṉ must see her with his own eyes.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' vil okkum nutal eṉṟālum, vēl okkum viḻi eṉṟālum,
pal okkum muttu eṉṟālum, pavaḷattai itaḻ eṉṟālum,
col okkum; poruḷ ovvātāl; collal ām uvamai uṇṭō?
nel okkum pul eṉṟālum, nēr uraittu ākavaṟṟō?