கம்பராமாயணம் 3231 · ஆரணிய 7.82
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பாபம் நின்ற இடத்து - பாவம் நிலைபெற்ற இடத்தில்; நில்லாப் பெற்றி போல் - நிற்கமாட்டாத பெருமைகளைப் போல; கோபமும் மறனும் மானக்கொதிப்பும் - சினமும், வீரமும், மானத்தால் விளையும் மனக் கொதிப்பும்; என்று இனைய எல்லாம் - என்னும் இப் பண்புகள் எல்லாம்; பற்றுவிட்ட - (இராவணனின் காமம் காரணமாக) தொடர்பு விட்டு நீங்கின; தீபம் ஒன்று ஒன்றை உற்றால் என்னல் ஆம் செயலின் - ஒரு விளக்கு மற்றொரு விளக்கை அடைந்ததென்று சொல்லத்தக்க வண்ணம்; புக்க - உள்ளத்தில் நுழைந்த; காம நோயும் தாபமும் - காம நோயும் அதனால் விளைந்த தவிப்பும்; ஆர் உயிர் கலந்த அன்றே - (இராவணனின் அரிய உயிரில் அப்போதே கலக்கலாயின.
தங்கைக்கு விளைவிக்கப்பட்ட துன்பம் கருதி எழுந்த சினம், வீரம், கொதிப்பு என்பனவெல்லாம் காமத்தால் வெற்றி கொள்ளப்பட்டன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Anger and valour and the seething of wounded pride, all such feelings,
- let go their hold, as virtues cannot stay where sin abides;
- and, as one may say of a lamp that catches from another lamp,
- the burning and the sickness of love that entered him mingled with his very life.
What the poem says
As Irāvaṇaṉ listens, his anger, his warrior's pride and his outrage at the insult to his sister all leave him, just as good qualities cannot remain where sin has settled.
In their place lust and its fever enter him and become one with his life, as quickly as one lamp lights another. Desire has defeated every feeling that his sister's suffering had aroused.