கம்பராமாயணம் 3232 · ஆரணிய 7.83

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கேட்ட மங்கையை மறந்திலாதான் - (சூர்ப்பணகை வாயிலாகக்) கேள்விப்பட்ட சீதையென்னும் பெண்ணை மட்டும் மறவாமலிருக்கும் இராவணன்; அரனையும் வெற்றி கொண்ட காமன் அம்பினால் - சிவபெருமானையும் வெற்றி கொண்டதாகிய மன்மதனின் மலரம்பினால் (காம வயப்பட்டு); கரனையும் மறந்தான் - (தன் வட திசைக் காவற்படைத் தலைவனாகிய) கரன் மாண்டு போனதையும் மறந்து போனான், தங்கை மூக்கினைக் கடிந்து நின்றான் - தன் தங்கையாகிய சூர்ப்பணகையின் மூக்கை அறுத்து எறிந்தவன்; உரனையும் மறந்தான் - வலிமையையும் மறந்து போனான்; உற்ற பழியையும் மறந்தான் - (அதனால் தனக்கு) நேர்ந்த பழியையும் மறந்து போனான்; முன்னைப் பெற்ற வரனையும் மறந்தான் - முன்பு (தான் தவம் செய்து) பெற்ற வரங்களின் ஆற்றலையும் மறந்து போனான்.

காமத்தால் அனைத்தையும் மறந்தவன் சீதையை மட்டும் மறக்கவில்லை என்று காட்டினார். காமன் அம்புகள் - தாமரை, மா, அசோகு, நீலோற்பலம், முல்லை என்னும் மலர்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He forgot even Karaṉ; he forgot the strength of the one
  2. who had cut off his sister's nose; he forgot the disgrace that had befallen him;
  3. by the arrows of Kāma, who had conquered even the victorious Araṉ,
  4. he forgot the boons he had won long ago; only the woman he had heard of he did not forget.

What the poem says

Struck by the flower arrows of Kāma, who once overcame even Śiva, Irāvaṇaṉ forgets everything else. Karaṉ's death, the strength of the man who mutilated his sister, the shame he has suffered, even the power of the boons he earned by penance, all slip from his mind.

The only thing he does not forget is Cītai, a woman he has only heard described. Kāma's five arrows are traditionally the lotus, mango blossom, aśoka, blue water lily and jasmine.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1karaṉaiyum maṟantāṉ; taṅkai mūkkiṉaik kaṭintu niṉṟāṉ
uraṉaiyum maṟantāṉ; uṟṟa paḻiyaiyum maṟantāṉ; veṟṟi
araṉaiyum koṇṭa kāmaṉ ampiṉāl, muṉṉaip peṟṟa
varaṉaiyum maṟantāṉ. kēṭṭa maṅkaiyai maṟantilātāṉ.