கம்பராமாயணம் 3233 · ஆரணிய 7.84
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சிற்றிடைச் சீதை என்னும் நாமமும் - மெல்லிய இடையை உடைய சீதை என்னும் பெயரும்; சிந்தை தானும் - இராவணன் மனமும்; உற்று - நெருங்கி; இரண்டு ஒன்றாய் நின்றால் - இரண்டு என்ற நிலை கடந்து ஒன்றாகப் பொருந்திப் போய்விட்டால்; ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன - சீதை என்ற ஒன்றின் பெயரை நீக்கி மற்றொரு பொருளை எண்ணுதற்கு; மற்றொரு மனமும் உண்டோ - இன்னொரு மனமும் இருக்கின்றதோ? (இல்லை); (எனவே); மறக்கல் ஆம் வழி மற்று யாதோ - சீதையை மறப்பதற்குப் பொருந்திய வழி வேறு யாது உள்ளது? (எதுவும் இல்லை); கற்றவர் - கல்வி வல்லவராயினும், ஞானம் - நன்மை தீமை பற்றிய உயரறிவு; இன்றேல் - இல்லையெனில்; காமத்தைக் கடத்தல் ஆமோ? - (பொருந்தாக்) காமத்தை வெல்லுதல் இயலுமோ? (இயலாது).
'சிற்றிடைச் சீதை' என்று முன்னர்ச் (3145) சூர்ப்பணகை அறிமுகம் செய்ததை இராவணன் மறந்திலன் என்பது தோன்றக் கூறுகின்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the name 'Cītai of the slender waist' and his mind
- met and, from two, became one, then to set one aside and think of another,
- was there a second mind? What other way was there to forget?
- Even for the learned, without true wisdom, can desire be overcome?
What the poem says
The name Cītai and Irāvaṇaṉ's mind have fused into one. To put her out of his thoughts he would need a second mind, and he has none, so there is no way for him to forget her.
The poet adds a general truth: learning alone cannot conquer lust without real wisdom. Irāvaṇaṉ is deeply learned, yet he is helpless. The phrase 'Cītai of the slender waist' repeats Cūrppaṇakai's own words, showing how they have lodged in him.