கம்பராமாயணம் 3234 · ஆரணிய 7.85
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மயிலுடைச் சாயலாளை - மயிலின் (இயற்கையான) சாயல் படைத்தவளை; வஞ்சியா முன்னம் - வஞ்சனையால் கவர்வதன் முன்னரே; நீண்ட எயிலுடை இலங்கை நாதன் - உயர்ந்தோங்கிய கோட்டை மதில்களை உடைய இலங்கையின் தலைவன்; இதயமாம் சிறையில் வைத்தான் - (தன்) மனமாகிய சிறைச்சாலையின் உள்ளே வைத்தான்; (அதன் விளைவாக); அயிலுடை அரக்கன் உள்ளம் - வேற்படை கொண்ட இராவணனாகிய இராக்கதன் மனம்; அவ்வழி - அவ்வகையில்; வெயிலுடை நாளில் உற்ற வெண்ணெய் போல் - வெயிற் பொழுதில் வைக்கப்பட்ட வெண்ணெய் போன்று; மெல்ல மெல்ல வெதும்பிற்று - சிறிது சிறிதாக வெப்பத்தால் உருகலாயிற்று. (அன்றே - ஈற்றசை.
அசோக வனத்துச் சிறைக்கு முன்பே மனச்சிறையில் வைத்தான் என நயம்பட உரைத்தார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Even before he carried off by deceit the woman with the grace of a peahen,
- the lord of Ilaṅkai with its high walls locked her in the prison of his heart;
- and the heart of the spear-bearing rākṣasa, there, little by little,
- melted like butter left out on a day of blazing sun.
What the poem says
Before Irāvaṇaṉ ever abducts Cītai, whose grace is like a peahen's, he imprisons her in his own heart. That heart, the heart of a fierce spear-wielding warrior, now melts slowly like butter in the summer sun.
The poet plays on the idea of imprisonment: long before Cītai is held captive in the aśoka grove of Ilaṅkai, she is already captive in Irāvaṇaṉ's mind.