கம்பராமாயணம் 3235 · ஆரணிய 7.86

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1விதியது வலியினானும் , மேல் உள விளைவினானும் ,
பதி உறு கேடு வந்து குறுகிய பயத்தினானும் ,
கதி உறு பொறியின் வெய்ய காமம் நோய் , கல்வி நோக்கா
மதி இலி மறையச் செய்த தீமை போல் வளர்ந்தது . அன்று , ஏ .

பொருள் · Meaning in Tamil

விதியது வலியினாலும் - ஊழ்வினையின் ஆற்றலினாலும்; மேல் உள விளைவினாலும் - இனிமேல் அதனால் உண்டாக இருக்கிற பயன்களாலும்; பதி உறு கேடு வந்து குறுகிய பயத்தினாலும் - இலங்கை மா நகருக்கு அழிவுக்குரிய நிலை ஏற்பட்டு நெருங்கியுள்ள பலன்களாலும்; கதி உறு பொறியின் - விரைவாய் உற்று பொறிகளின் வழியே, வெய்ய காம நோய் - (இராவணனைப் பற்றிய) கொடிய காம நோயானது; கல்வி நோக்கா மதியிலி - கல்வி அறிவு அற்ற அறிவிலி ஒருவன்; மறையச் செய்த தீமை போல் - யாருமறியாமல் மறைவாகச் செய்த கெடுதி போல; வளர்ந்தது - ஓங்கிப் பெருகியது; அன்றே - அசை.

வேதவதி சாபம், வானரங்களால் இலங்கை அழிய வேண்டுமென நந்தி இட்ட சாபம் முதலியனவெல்லாம் நிறைவேறத் தக்க காலம் நெருங்கியது. ஞானமற்றவன் மறைவாகச் செய்த தீங்கும் விரைவாக வெளிப்படும் என்பது தோன்றக் கூறினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Through the power of fate, through the consequences yet to come,
  2. and through the fruit of the ruin that had drawn near the city,
  3. the fierce sickness of lust, rushing in through the senses,
  4. grew like the evil a fool who never heeds learning does in secret.

What the poem says

Irāvaṇaṉ's desire grows fast, and the poet gives its causes: the force of fate, the results his past deeds must bring, and the destruction now closing in on Ilaṅkai. Old curses were waiting to be fulfilled, such as Vētavati's and Nandi's curse that monkeys would destroy the city.

The lust spreads through his senses the way a secret wrong done by an ignorant fool grows and soon comes to light.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vitiyatu valiyiṉālum, mēl uḷa viḷaiviṉālum,
pati uṟu kēṭu vantu kuṟukiya payattiṉālum,
kati uṟu poṟiyiṉ veyya kāma nōy, kalvi nōkkā
matiyili maṟaiyac ceyta tīmaipōl vaḷarntatu. aṉṟē.