கம்பராமாயணம் 3237 · ஆரணிய 7.88
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இருக்கை நின்று எழுந்தனன் - (இராவணன்) தான் வீற்றிருந்த அரியாசனத்தினின்றும் எழுந்தான்; ஆண்டு - அப்பொழுது; ஏழ் உலகத்துளோரும் - ஏழு உலகங்களிலும் இருப்பவர்களும்; ஆசி மொழிந்தனர் - வாழ்த்துக்களைக் கூறினார்கள்; எங்கும் சங்கம் ஓசை முழங்கின - எவ்விடத்தும் சங்குகள் ஒலி முழக்கம் செய்தன; பூவின் மாரி பொழிந்தன - மலர் மழை பொழியலாயிற்று; புறத்தோர் எல்லாம் போயினர் - அருகிருந்த பிறர் எல்லாம் அகன்று சென்றனர்; அழிந்து அழி சிந்தையோடும் - (இராவணனும்) சிதைந்து குலைகிற மனத்தோடு; ஆடகக் கோயில் புக்கான் - பொன் மாளிகையான (தன்) அரண்மனைக்கு சென்றான்.
ஆடகம் - நால் வகைப் பொன்னில் ஒருவகை. சாதரூபம், கிளிச்சிறை, சாம்புநதம் என்பன பிற.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He rose from his throne; there, those of all seven worlds
- uttered the sound of blessings; conches roared on every side;
- showers of flowers rained down; all the attendants departed;
- and with a mind falling to pieces he entered his palace of gold.
What the poem says
Irāvaṇaṉ rises from his throne and the court ceremony follows as usual: beings from the seven worlds call out blessings, conches sound everywhere, flowers rain down, and the courtiers withdraw.
Outwardly all is splendour, but Irāvaṇaṉ goes into his golden palace with his mind in ruins. Āṭakam, the word used for its gold, is one of four kinds of gold named in Tamil tradition.