கம்பராமாயணம் 3243 · ஆரணிய 7.94

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''

பொருள் · Meaning in Tamil

கொன்றை துன்று கோதையோடு - கொன்றைக் காயை ஒத்த கூந்தலுடனே; ஓர் கொம்பு வந்து - ஒரு பூங்கொம்பு போன்றாள் வந்து; என் நெஞ்சிடை நின்றது - எனது மனத்திற்குள் தங்கினாள், கண்டது உண்டு - (அவளை) நான் பார்த்ததுண்டு; என்று அழிந்து அழுங்கும் நீர்மையான் - என்று கருதி மனம் சிதைந்து வருந்தும் தன்மையனான இராவணன்; மன்றல் தங்கு அலங்கல் மாரன் - மணம் பொருந்திய மலர் மாலை சூடிய மன்மதன்; வாளி போல - எய்யும் கணை போன்ற; மல்லிகைத் தென்றல் வந்து - மல்லிகை மணம் சுமந்த தென்றல் காற்று வந்து; எதிர்ந்த போது - மேனியில் பட்டபோது; சீறுவானும் ஆயினான் - (அக்காற்றின் மீது) சினம் கொள்வானும் ஆனான்.

குளிர்ந்த தென்றலும் காமநோயை மிகுவித்தது என்று கூறினார். கொன்றைக் காய் குழலுக்கு உவமையாவதை 'கொன்றையம் பூங்குழலாள்' எனச் சிலப்பதிகாரமும் கூறும் (சிலம்பு : ஆய்ச்சியர் குரவை - கொளு 0) மன்மதன் மலர்க் கணை போலவே மல்லிகை மணம் சுமந்த தென்றலும் வருத்தியது; உவமை மிகு நயமானது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'A slender creeper with tresses like the koṉṟai came and stood within my heart;
  2. I have seen her,' he thought, and wasted with grief; and he
  3. when the southern breeze, sweet with jasmine, came against him
  4. like an arrow of Māraṉ with his fragrant garland, flew into a rage.

What the poem says

Irāvaṇaṉ tells himself that a woman slender as a flowering branch, with long hair like the hanging pods of the koṉṟai tree, has come and taken her place in his heart; it is as if he has seen her. He grieves and pines.

When the cool southern breeze arrives, carrying the scent of jasmine, it strikes him like one of Kāma's flower arrows, and he flies into a temper at it. Even what should soothe him only feeds his lovesickness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' koṉṟai tuṉṟu kōtaiyōṭu ōr kompu vantu eṉ neñciṭai
niṉṟatu uṇṭu kaṇṭatu '' eṉṟu aḻintu aḻuṅkum nīrmaiyāṉ,
maṉṟal taṅku alaṅkal māraṉ vāḷi pōla, mallikait
teṉṟal vantu etirnta pōtu cīṟuvāṉum āyiṉāṉ.