கம்பராமாயணம் 3245 · ஆரணிய 7.96
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(அச் சோலையில்); பனசம் மாணிக்கம் - பலா மரங்கள் மாணிக்க மயமாகவும்; வாழை மரகதம் - வாழை மரங்கள் மரகத மயமாகவும்; தேமா வயிரம் - இனிய மாமரங்கள் வைர மயமாகவும், வேங்கை ஆணிப்பொன் - வேங்கை மரங்கள் உயர்வகைப் பொன் மயமாகவும்; கோங்கம் அரவிந்த ராகம் - கோங்கு மரங்கள் பதும ராகம் என்னும் இரத்தின மயமாகவும்; பூகம் சேண் உய்க்கும் நீலம் - கமுகு நெடுந்தொலைவு ஒளிரும் நீலமணி மயமாகவும்; சாலம் குருவிந்தம் - ஆச்சா மரங்கள் குருவிந்தம் என்னும் மணி மயமாகவும்; தெங்கு வெள்ளி - தென்னை மரங்கள் வெள்ளி மயமாகவும்; நாகம் பாணித் தண் பளிங்கு - சுர புன்னை மரங்கள் நீரோட்டம் மிக்க கண்ணாடி மயமாகவும்; பாடலம் பவளம் - பாதிரி மரங்கள் பவள மயமாகவும் (இருந்த. (மன்னோ - அசை)
இராவணனின் சோலை மரங்கள் தங்கம், மணிகள் மயமானவை என்று சுந்தரகாண்டச் செய்யுள் (4853) விளக்குகிறது. வினை முற்று வருவித்து முடிக்கப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The jack trees were of ruby; the plantains of emerald; the sweet mangoes of diamond;
- the vēṅkai trees of pure gold; the kōṅku of lotus-hued ruby; the areca palms
- of sapphire shining far; the sāl trees of kuruvintam gems; the coconut palms of silver;
- the nākam trees of cool, liquid crystal; the trumpet-flower trees of coral.
What the poem says
The garden Irāvaṇaṉ enters is made entirely of precious materials. Each kind of tree is a different jewel or metal: rubies for the jackfruit, emerald for the plantains, diamond for the mangoes, gold for the vēṅkai, sapphire for the areca palms, silver for the coconuts, crystal for the nākam and coral for the pāṭalam.
A later verse in the Sundara Kāṇḍam also describes Irāvaṇaṉ's gardens as made of gold and gems. Grammatically, the verb 'were' must be supplied to complete each clause.