கம்பராமாயணம் 3246 · ஆரணிய 7.97

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வான் உற நிவந்த செங்கேழ் மணிமரம் துவன்றி , மாக
மீனொடு மலர்கள் தம்மில் வேற்றுமை தெரிதல் தேற்றாத்
தேன் உகு சோலை நாப்பண் , செம்பொன் மண்டபம் அத்து உள் , ஆண்டு ஓர்
பால்நிற அமளி சேர்ந்தான் பையுள் உற்று உயங்கி நைவான் .

பொருள் · Meaning in Tamil

வானுற நிவந்த செங் கேழ் - விண் தொடுமாறு உயர்ந்த அழகிய ஒளியுடைய; மணி மரம் - இரத்தின மயமான மரங்கள்; துவன்றி - நெருங்கி வளர்ந்து; வான மீனொடு மலர்கள் தம்மின் - விண் மீன்களுக்கும் மரங்களின் மலர்களுக்கும் இடையே; வேற்றுமை தெரிதல் தேற்றா - வேறுபாடு தெரிய முடியாதபடி (அமைந்திருக்கும்); தேன் உகு சோலை நாப்பண் - தேன் சிந்தும் சோலையின் நடுவே, செம்பொன் மண்டபத்துள் - தங்கமயமான மண்டபத்தில்; ஆங்கு ஓர் - அங்கே இடப்பட்ட ஒரு; பால் நிற அமளி சேர்ந்தான் - பால் போன்ற வெள்ளை நிறப் படுக்கையினை அடைந்த (இராவணன்; பையுள் உற்று - துயரம் வந்தடைய; உயங்கி நைவான் - நொந்து வருந்தினான்.

முதல் இரண்டடியில் உவமை அணி அமைந்துள்ளது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Amid a grove dripping honey, crowded with red-glowing jewelled trees rising to the sky,
  2. where one could not tell apart the stars of the sky
  3. and the flowers, in a pavilion of red gold, there
  4. he went to a milk-white couch, and, overcome with anguish, languished and pined.

What the poem says

Irāvaṇaṉ comes to a pavilion of gold in the middle of the garden. Its jewelled trees are so tall and so thick with blossoms that their flowers cannot be told apart from the stars in the sky.

There he lies down on a couch as white as milk, but his anguish only grows, and he wastes away with longing.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāṉ uṟa nivanta ceṅ kēḻ maṇi maram tuvaṉṟi, vāṉa
mīṉoṭu malarkaḷ tammiṉ vēṟṟumai terital tēṟṟā
tēṉ uku cōlai nāppaṇ, cempoṉ maṇṭapattuḷ, āṅku ōr
pāl niṟa amaḷi cērntāṉ paiyuḷ uṟṟu uyaṅki naivāṉ.