கம்பராமாயணம் 3248 · ஆரணிய 7.99
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பருவத்தால் - (பின் பனிப்) பருவம் காரணமாக; வாடை தந்த பசும்பனி - வடதிசைக் காற்றுடன் கலந்து வந்த புதிய பனியானது; அனங்கன் வாளி - மன்மத பாணங்கள்; உருவிப் புக்கு ஒளித்த புண்ணில் - பாய்ந்து நுழைந்து ஓடி மறைந்ததால் விளைந்த புண்ணில்; குளித்தலும் - சென்று தைத்தலும்; உளைந்து விம்மி - வருந்திக் கலங்கி (இராவணன்; 'இருதுத் தான் யாது அடா என்று - இப்பொழுது நடப்பிலுள்ள பருவ காலம் தான் ஏதடா' என்று; இயம்பினன் - வினவினான்; இயம்பலோடும் - அவ்வாறு வினவியதும்; வெருவிப் போய் சிசிரம் நீங்கி - அச்சமுற்றுப் பின் பனியான அப்பருவம் நீங்கிச் செல்ல; வேனில் வந்து இறுத்தது - (தொடர்ந்து வரும்) வேனிலாகிய வசந்தகாலம் வந்து சேர்ந்தது; (அன்றே - அசை)
இராவணனுக்குப் பயந்து பின்பனி விலக வேனிற் பருவம் வந்து இசைந்தது. இயல்பின் இயங்கும் பருவ காலங்களும் அஞ்சித் தடுமாறும் வகையில் இலங்கையர் கோன் ஆட்சி அமைந்தது; உயர்வு நவிற்சிதான் எனினும் காவிய நிகழ்ச்சிக்குப் பொருத்தமானது. ருது என்னும் வடசொல் இருது என வந்தது. முதுவேனில், கார், கூதிர், முன்பனி என்பன பிற பருவங்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the fresh dew that the north wind brought in its season
- seeped into the wounds where Kāma's arrows had pierced and hidden,
- he writhed and sobbed and cried, 'What season is this, fellow?'
- and as soon as he said it, the late-dew season fled in terror and spring came and settled in.
What the poem says
It is the late-dew season, and the cold north wind carries fresh dew that stings the wounds left by Kāma's arrows. In pain, Irāvaṇaṉ shouts, 'What season is this?'
The seasons are so afraid of him that the late-dew season immediately runs away and spring arrives in its place. The exaggeration shows how far his power reaches: even the natural order of the seasons trembles at his word. The Tamil year has six seasons, of which spring is one.