கம்பராமாயணம் 3249 · ஆரணிய 7.100

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வன் பணை மரமும் தீய , மலைகளும் குளிர , ஆழும்
மென் பனி எரிந்தது என்றால் , வேனிலை விளம்பல் ஆமோ !
அன்பு எனும் விடம் உண்டாரை ஆற்றல் ஆம் மருந்தும் உண்டோ ,
இன்பமும் துன்பம்தானும் உள்ளத்தோடு இயைந்த அன்றே ?

பொருள் · Meaning in Tamil

வன்பணை மரமும் - வைரம் பாய்ந்த பெரிய கிளைகளைக் கொண்ட மரங்களும்; தீயும் மலைகளும் - காட்டுத் தீயும் மலைகளும்; குளிர வாழும் மென்பனி - குளிர்ச்சி பெறும்படி நிலை பெற்ற மெல்லிய பனியே; எரிந்தது என்றால் - (இராவணன் மேனியில்) எரிச்சலை ஊட்டியது என்றால்; வேனிலை விளம்பலாமோ? - (வெயில் விரிகின்ற) வேனிற்காலம் (எத்தகைய துன்பம் தந்திருக்கும்) எனக் கூறுதல் இயலுமோ? (இயலாது); (மேலும்) அன்பு எனும் விட முண்டாரை - காமம் என்னும் நஞ்சு அருந்தியவர்களை; ஆற்றல் ஆம் மருந்தும் உண்டோ? - அதிலிருந்து காக்கும் வலிமை சான்ற மருந்தும் உலகில் உண்டோ? (இல்லை); இன்பமும் துன்பம் தானும் - இன்ப துன்பமாகிய இரண்டு மாறுபட்ட நிலைகளையும் படைத்துத் தருவது; உள்ளத்தோடு இயைந்த அன்றே - உள்ளத்தோடு பொருந்திய உணர்வுகளே அல்லவா?

நன்மை தீமைகளை மனமே உணர வைக்கிறது. புறச்சூழல் அல்ல என எடுத்துக் காட்டுகின்றார். அன்பு என்ற சொல் இங்கே காமமாகிய அன்பைக் குறித்தது. பின்பனிப் பருவத்தை விட இளவேனிற் பருவம் மிகுதியாகத் துன்பம் தந்தது. இப் பொதுப் பொருள் கொண்டு, இராவணன் மன உணர்வினை விளக்கிச் சிறப்புப் பொருள் புலப்படுத்தியதால் வேற்றுப் பொருள் வைப்பணியாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. If the soft dew, which lives to make cool even the trees with strong boughs
  2. that the fire scorched, and the hills, burned him, can one even speak of the spring?
  3. Is there any medicine that can cure those who have drunk the poison called love?
  4. Pleasure and pain alike are bound up with the mind, are they not?

What the poem says

If even the gentle dew, which cools trees and hills, felt like fire on Irāvaṇaṉ's skin, the heat of spring was beyond words. There is no medicine for someone who has swallowed the poison of desire.

The poet closes with a general truth: pleasure and pain come from the mind, not from the outside world. Love here means sexual passion. Stating a general maxim to explain a particular case is a recognised figure of speech.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṉ paṇai maramum tīya, malaikaḷum kuḷira, vāḻum
meṉ paṉi erintatu eṉṟāl, vēṉilai viḷampalāmō!
aṉpu eṉum viṭam uṇṭārai āṟṟalām maruntum uṇṭō,
iṉpamum tuṉpamtāṉum uḷḷattōṭu iyainta aṉṟē?