கம்பராமாயணம் 3250 · ஆரணிய 7.101

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1மாதிரம் அத்து இறுதி காறும் , தன் மனத்து எழுந்த மையல்
வேதனை வெப்பம் செய்ய , வேனிலும் வெதுப்புங் காலை ,
'' யாது இது ? இங்கு இதனின் முன்னைச் சிசிரம் நன்று ; இதனை நீக்கிக்
கூதிர் ஆம் பருவம் தன்னைக் கொணருதிர் விரைவின் '' என்றான் .

பொருள் · Meaning in Tamil

தன் மனத்து எழுந்த மையல் - அவன் உள்ளத்தில் எழுந்த காமம், மாதிரத்து இறுதிகாறும் - திசைகளின் எல்லைகளையும் தொட்டு; வேதனை வெப்பம் செய்ய - துன்பமாகிய வெம்மையைப் பரப்ப; வேனிலும் வெதுப்பும் காலை - வேனிற் காலமும் கொடிய வெப்பத்தை உண்டுபண்ண; அவன்; 'இங்கு இது யாது? - இங்கு துன்பம் தரும் இப்பருவம் யாது?; முன்னைச் சீதம் இதனின் நன்று - முன்பு வந்த குளிர்ச்சிப் பனிப்பருவம் இதனினும் நன்றாயிருந்தது; இதனை நீக்க - இவ் வேனிற் பருவத்தை விலக்கி; கூதிராம் பருவம் தன்னை - கூதிராம் பருவகாலத்தை; விரைவின் கொணருதிர் - விரைந்து கொண்டு வாருங்கள்; என்றான் - என்று பணியாளரிடம் கட்டளையிட்டான்.

வேனிற் காலம் தன் இயல்புக்கேற்பக் காம உணர்வை மிகுவிக்கக் கூதிர்ப் பருவத்தைக் கொணர இராவணன் ஆணையிட்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the delusion that rose in his mind spread its tormenting heat
  2. to the very ends of the quarters, and the spring too scorched him,
  3. 'What is this here? The cold before this was better; to drive this away,
  4. bring the season of chill rains, and quickly!' he said.

What the poem says

Irāvaṇaṉ's lust radiates a painful heat to the edges of the world, and spring adds its own warmth. He finds this worse than the cold season he has just banished.

So he orders his servants to get rid of spring at once and bring in kūtir, the season of cold autumn rains. The seasons have become his servants, to be summoned and dismissed at will.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mātirattu iṟutikāṟum, taṉ maṉattu eḻunta maiyal
vētaṉai veppam ceyya, vēṉilum vetuppum kālai,
'' yātu itu? iṅku itaṉiṉ muṉṉaic cītam naṉṟu; itaṉai nīkka
kūtir ām paruvam taṉṉaik koṇarutir viraiviṉ '' eṉṟāṉ.